அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > நாங்கள் இந்தியர்களைப் பிரதிநிதிக்கவில்லை! மலேசியர்களை பிரதிநிதிகிறோம் – குணராஜ்
அரசியல்முதன்மைச் செய்திகள்

நாங்கள் இந்தியர்களைப் பிரதிநிதிக்கவில்லை! மலேசியர்களை பிரதிநிதிகிறோம் – குணராஜ்

கிள்ளான் ஜூலை 8-

நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தில் உள்ள இந்திய தலைவர்கள் இந்நாட்டில் உள்ள இந்திய சமுதாயத்தை மட்டும் பிரதிநிதிகள் இல்லை, அவர்கள் ஒட்டுமொத்த மலேசியர்களின் பிரதிநிதிகள் என செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் தெரிவித்தார்.

கடந்த தேசிய முன்னணி அரசாங்கத்தில் இந்திய சமுதாயத்தை பிரதிநிதிப்பதற்காக மலேசிய இந்திய காங்கிரஸ் செயல்பட்டது. சீனர்களுக்காக மலேசிய சீன சங்கமும், மலாய்க்காரர்களுக்கு ஆக அம்னோவும் செயல்பட்டன. ஆனால் நம்பிக்கைக் கூட்டணியை பொறுத்தவரை எங்களுக்குள் எந்தப் பிரிவினையும் கிடையாது, நாங்கள் அனைவரும் மலேசியர்களின் பிரதிநிதிகள் என அவர் தெரிவித்தார்.

நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தில் இந்தியர்களை பிரதிநிதிப்பதற்கு தலைவர்கள் இல்லை என மலேசிய இந்திய காங்கிரசின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறியிருந்த கருத்திற்கு மறுமொழி அளித்த அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்தியர்களுக்காக தனிக்கட்சி என்பது கடந்த அரசாங்கத்தோடு முடிந்துவிட்டது. இங்கு நாம் அனைவரையும் பிரதிநிதிகின்றோம் இங்கு மலேசியர்கள் என்ற சொல்லுக்கு மட்டுமே அங்கீகாரம் உண்டு என அவர் தெரிவித்தார். கடந்த தேசிய முன்னணி ஆட்சியில் ஒரே ஒரு இந்தியர் மட்டுமே முழு அமைச்சராக இருந்தார் ஆனால் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் கீழ் நால்வர் அமைச்சராக இருக்கின்றார்கள் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது என அவர் நினைவுறுத்தினார்.

சக்சஸ் ஜெர்னி கல்வி நிலையம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் மேற்கண்டவாறு கூறினார். இந்தியர்கள் என யாரும் தனித்து பேசக்கூடாது, இது மலேசிய திருநாடு என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன