அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > ஸ்ரீதரன் கொலை ! தங்கை மற்றும் ஆடவனுக்கும் காவல் நீட்டிப்பு !
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

ஸ்ரீதரன் கொலை ! தங்கை மற்றும் ஆடவனுக்கும் காவல் நீட்டிப்பு !

தைப்பிங் ஜூலை 8-

கால்வாயில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட ஸ்ரீதரன் கொலைச் சம்பவம் தொடர்பாக கைதான இருவரிடம் தொடர் விசாரணை மேற்கொள்ள ஆறு நாள் போலீஸ்காவலில் கைப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 15 மற்றும் 16 வயதுடைய அவ்விருவரும் இங்குள்ள நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டு காவலில் வைக்க அனுமதியைப் போலீசார் பெற்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை ஸ்ரீ தரன் (வயது 16), காணாமல் போனதாக புகார் கூறப்பட்டது. இங்குள்ள இடை நிலைப்பள்ளியில் பயின்று வந்த மாணவனின் சடலம் அம்மாணவனின் வீட்டின் பின் புறம் உள்ள கால்வாயில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.

இந்த சம்பவம் தாமான் சௌஜானா ஜெயா அருகில் உள்ள தாமான் கிளேன் வியூ குடியிருப்பு பகுதியில் நிகழ்ந்துள்ளது.அந்த சடலம் மீது மேற்கொள்ளப்பட்ட சவபரிசோதனையில் அவர் கொலை செய்யப்பட்டதற்கான அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து போலீசார் குற்றவியல் பிரிவு 302 கீழ் விசாரணையை தொடங்கினர் .

இதன் தொடர்பாக ஸ்ரீ தரனின் தங்கை வயது 15 மற்றும் 16 வயதுடைய ஆடவரையும் போலீஸ் கைது செய்தனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன