அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > பிஎஸ்எம் : முகமட் நசீர் -சரஸ்வதி பதவி விலகுவர்!
அரசியல்முதன்மைச் செய்திகள்

பிஎஸ்எம் : முகமட் நசீர் -சரஸ்வதி பதவி விலகுவர்!

கோலாலம்பூர் ஜூலை 9-

பி.எஸ்.எம். கட்சியின் அமைப்பு உறுப்பினரும் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அக்கட்சியின் தலைவராக இருந்து வரும் டாக்டர் முகமட் நசீர் பதவி விலகுவார். வெள்ளிக்கிழமை நடைபெறும் கட்சியின் மாநாட்டில் தலைவர் பதவியிலிருந்து முகமட் நசீர் விலகுவார்.

மேலும் பிஎஸ்எம் கட்சியின் துணைத் தலைவர் எம்.சரஸ்வதியும் தமது பதவியில் இருந்து விலகுவார் என அக்கட்சியின் மத்திய செயலவை உறுப்பினர் அருட்செல்வன் தெரிவித்தார்.

இவ்விருவருக்கும் பதில் பி.எஸ்.எம். கட்சியின் தலைவர் மற்றும் துணைத் தலைவராக யார் பொறுப்பேற்பார்கள் என்ற விவரத்தை அருள்செல்வன் வெளியிடவில்லை.

கட்சியின் தலைவர், துணைத் தலைவர், ,தலைமைச் செயலாளர் மற்றும் பொருளாளர் கூடிய பட்சம் 5 தவணை அல்லது 10 ஆண்டுகள் மட்டுமே பதவியில் இருக்க முடியும் என 2007 ஆம் ஆண்டு மத்திய செயற்குழு நிறைவேற்றிய தீர்மானத்திற்கு ஏற்ப டாக்டர் நசீர் – சரஸ்வதி ஆகிய இருவரும் பதவி விலகுவதாக அருட்செல்வன் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன