சாலைக்கு வி.டேவிட் பெயர்: பரிந்துரை என்னவானது? சுபாஷ் சந்திரபோஸ் கேள்வி

கோலாலம்பூர், ஜூலை 8-

தங்களின் சொந்த கட்சிக்காகவும், சமுதாயத்துக்காகவும் உழைத்த தலைவருக்கு குரல் கொடுக்க முடியாத நம்பிக்கைக் கூட்டணியின் இந்திய தலைவர்களா மலேசிய இந்தியர்களுக்கு குரல் கொடுக்க போகின்றார்கள்? என தேசிய மஇகா தகவல் பிரிவு செயலாளர் ஆ. சுபாஷ் சந்திரபோஸ் கேள்வி எழுப்பினார்.

1959ஆம் ஆண்டுகளில் தோட்டத் தொழிலாளர்களுகாக போராடிய சிறந்தத் தலைவர். தமது 26ஆம் வயதிலேயே நாட்டின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். 1958ஆம் ஆண்டில் அவசர சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார். அண்ணாரின் முயற்சியால் மே 1ஆம் திகதி நம் நாட்டில் தொழிலாளர் தினமாக கொண்டாப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது.

இவர் ஆற்றிய சேவைக்காக 2010ஆம் ஆண்டு, பெட்டாலிங் ஜாயா, பாராட் சாலையை, வி.டேவிட் சாலையாக மாற்ற அந்நாள் சிலாங்கூர் மாநில முதலமைச்சர் டான் ஸ்ரீ காலிட் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த பரிந்துரைக்கு அக்கால முதல் அமைச்சர் ஏக மனதாக ஒப்புக்கொண்டார். இன்று அண்மையில் நாடறிந்த மூத்த அரசியல் ஆய்வாளர் அமரர் கூ கை லிம் அவர்களின் மறைவுக்கு ஜலன் சிகாமட் சாலையை அவர் பெயருக்கு மாற்றுவது உறுதிப்படுத்தப்பட்டது.

அப்படியென்றால் அமரர் வி டேவிட் பெயரில் சாலை விண்ணப்பம் என்ன நேர்ந்தது? இது குறித்து இன்றளவும் ஏன் யாரும் கேள்வி எழுப்பவில்லை என சுபாஷ் கேள்வி எழுப்பினார்.

இன்று நம்பிக்கைக் கூட்டணியைச் சாராத பலர் இந்த கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ஆனார் எதுவுமே நடக்காதது போல் வாயை மூடிக்கொண்டிருக்கும் நம்பிக்கைக் கூட்டணி இந்திய பிரதிநிதிகள் வாயைத் திறப்பார்களா? என்ற கேள்வியை அவர் முன்வைத்தார்.

தங்களின் கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கு கூட வாய் திறக்காத இவர்கள், நாட்டில் உள்ள இந்தியர்களின் பிரச்சனைகளுக்கு எப்படி வாய் திறப்பார்கள்? இதனை மக்கள் சிந்திக்க வேண்டுமென சுபாஷ் வலியுறுத்தினார்.