புதன்கிழமை, நவம்பர் 13, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > பற்களால் ஏர்பஸ் விமானத்தை இழுத்து ராதாகிருஷ்ணன் சாதனை புரிவார்!
சமூகம்முதன்மைச் செய்திகள்விளையாட்டு

பற்களால் ஏர்பஸ் விமானத்தை இழுத்து ராதாகிருஷ்ணன் சாதனை புரிவார்!

புத்ராஜெயா ஜூலை 10-

பற்களின் பலசாலி என வர்ணிக்கப்படும் வி.ராதாகிருஷ்ணன் தனது பற்களின் மூலம் ஏர்பஸ் ஏ 380 விமானத்தை இழுத்து சாதனை புரிவதற்கு திட்டமிட்டுள்ளார்.

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் மலேசிய விமான நிறுவனத்திற்கு சொந்தமான ஏர்பஸ் விமானத்தை பற்களால் இழுத்து சாதனை செய்வதற்கு 37 வயதுடைய ராதாகிருஷ்ணன் திட்டமிட்டுள்ளார்.

பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் இத்தகவலை டுவிட்டர் மற்றும் தமது முகநூலில் வெளியிட்டார். பிற்பகலில் தாம் ராதாகிருஷ்ணனை சந்தித்ததாகவும் அப்போது ஏர்பஸ் விமானத்தை இழுத்து சாதனை புரிவதற்கு அவர் தெரிவித்ததாக டாக்டர் மகாதீர் கூறினார்.

கடந்த 2003 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மலேயன் ரயில்வேயின் மின்சார ரயிலின் 6 பெட்டிகளை சுமார் 4.2 மீட்டர் தூரத்திற்கு தமது பற்களினால் இழுத்து உலகச் சாதனையை ராதாகிருஷ்ணன் ஏற்படுத்தியிருக்கிறார். இந்த சாதனையை டாக்டர் மகாதீர் முன்னிலையில் ராதாகிருஷ்ணன் நிகழ்த்திக் காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.பற்களின் மூலம் அவர் இழுத்த ரயில் பெட்டிகளின் எடை 260. 8 டன் ஆகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன