அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் ஆனித் திருமஞ்சனம்
சமூகம்முதன்மைச் செய்திகள்

கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் ஆனித் திருமஞ்சனம்

கோலாலம்பூர், ஜூலை 10-

அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம் ” என்று போற்றப்படும் சிதம்பரத்தில் தீராத நடனம் புரியும் தில்லைக் கூத்தன் நடராஜ பெருமான் தமது சக்தியாகிய சிவகாமி சுண்தரியுடன் ஆனித் திருமஞ்சனதன்று கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் எழிலாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறப்பாக இந்த ஆனித் திருமஞ்சன உபயம் பொதுப் பணித்துறை ஊழியர்களால் கோலாலம்பூர் ஸ்ரீ மக மாரியம்மன் கோயிலில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் காலையில் சிறப்பு அபிஷேகத்துடன் துவங்கி, சிறப்பு பூஜை, வழிபாடு, மதியம் சிறப்பு பூஜை, வழிபாடு மற்றும் அன்னதானம் பிறகு மாலையில் சிறப்பு பூஜை, வழிபாடு மற்றும் உள்வீதி உலாவுடன் நிறைவுபெற்றது.

சிறப்பு வழிபாட்டில் கலந்துக்கொண்ட பக்தர்கள்

ஆனித்திருமஞ்சனம் மகா அபிஷேகத்தை திருமஞ்சனம் என்றும் சொல்லலாம். நமக்கு ஒரு வருடம். அதுவே தேவர்களுக்கு ஒரு நாள். அதேபோல் தேவர்களுக்கு வைகறை மார்கழி, காலைப் பொழுது மாசி, உச்சிக்காலம் சித்திரை, மாலைப்பொழுது ஆனி, இரவுப் பொழுது ஆவணி, அர்த்த ஜாமம் புரட்டாசி என்று கணக்கிட்டுச் சொல்லப்பட்டிருக்கிறது. இதில், சந்தியா காலங்களான ஆனியும், மார்கழியுமே இறை வழிபாட்டிற்கு மிகவும் உகந்த மாதங்களாகப் கருதப்படுகின்றன.

ஸ்ரீநடராஜருக்கு வருடத்துக்கு ஆறு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. இதில், மார்கழி திருவாதிரையும், ஆனி திருமஞ்சனமும் முக்கியமான திருவிழாக்கள். இதில் குறிப்பாக, ஆனி மாத உத்திர நட்சத்திர நாளில், தேவர்கள், ஆடலரசனுக்குப் பூஜைகள் செய்வதாக சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. அந்த நன்னாளே ஆனித் திருமஞ்சனத் திருவிழா.

தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜாவுடன் (வலதிலிருந்து மூன்றாவது), அறங்காவலர்கள், நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் உபயக்காரர்கள்.

நமது ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் ஆனித் திருமஞ்சன உபயம் பொதுப் பணித்துறை ஊழியர்களுக்கு சொந்தமானதாகும். இத்திருநாளில் காலையில் ஸ்ரீ நடராஜர் அன்னை மீனாட்சியுடன் வசந்த மண்டபத்திலிருந்து உற்சவ மண்டபத்தில் எழுந்தருளி ஒரு நாள் முழுதும் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருளினார். பிறகு சிறப்பு அபிஷேகங்களும் பூஜைகளும் நடைப்பெற்றன. மதியம், சிறப்பு பூஜைக்கு பின் அன்னதானமும் வழங்கப்பட்டது. மாலையில் ஹோமம், சிறப்பு பூஜை மற்றும் வழிபாட்டிற்குப் பின் உற்சவ மண்டபத்தில் வீற்றிருந்த ஸ்ரீ நடராஜரும் அன்னை மீனாட்சியும் திருப்பல்லக்கில் உள்வீதி உலா வந்தனர். மகா ஆராதனைக்குப் பின் உபயக்காரர்களுக்கு காளாஞ்சி வழங்கப்பட்டது.

இந்த உற்சவத்தில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ. ஆர். நடராஜா அவர்கள் சிறப்பு வருகை புரிந்தார். அவரோடு, தேவஸ்தானத்தின் அறங்காவலர்கள், நிர்வாக உறுப்பினர்கள் பொதுப் பணித்துறை ஊழியர்கள் மற்றும் பொதுமக்களும் திரளாகக் கலந்து சிறப்பு செய்தனர். இந்த உற்சவம் தேவஸ்தானத்தின் தலைமை குருக்கள் ஸ்ரீ சிவக்குமார் பட்டர் அவர்களால் சிறப்பாக வழினத்தப்பட்டது.

இவ்வேளையில் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் இந்த உற்சவம் வெற்றிகரமாக நிறைவு பெற ஒத்துழைப்பு நல்கிய அணைத்து தரப்பினருக்கும் தமது உளமார்ந்த தெரிவித்துக்கொள்கிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன