அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > தேசம் ஊடக சாதனையாளர்கள் விருது விழா!
சமூகம்முதன்மைச் செய்திகள்

தேசம் ஊடக சாதனையாளர்கள் விருது விழா!

கோலாலம்பூர்,ஜூலை 10-

சாதனையாளர்களை கௌரவிக்கும் ஒரு விழாவாக 2017 தொடங்கி ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் “தேசம் ஊடக சாதனையாளர்கள் விருது விழா 2018/2019 ஆகஸ்டு 24ஆம் தேதி பண்டார் சௌஜானாவில் அமைந்துள்ள மாசா பல்கலைக்கழக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவிருப்பதாக தேசம் தோற்றுநர் குணாளன் மணியம் கூறினார்.

கடந்த 2017இல் இந்த தேசம் சாதனையாளர் விருது விழா முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. ஊடகவியலாளர்களின் சாதனைக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் ஊடக பணியாளர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டது. அதுமட்டுமன்றி கலைத்துறை, விளையாட்டுத் துறை, வர்த்தகத் துறை, அரசின் சார்பற்ற நிறுவன சேவைகள், தமிழ்ப்பள்ளி, பொது சாதனையாளர்கள் என்று பலருக்கு இந்த அங்கீகார விருது வழங்கப்பட்டதாக தலைநகரில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் தேசம் வலைத்தள தலைமை ஆசிரியருமான குணாளன் மணியம் தெரிவித்தார்.

இந்த விருது விழாவில் 2018/2019 ஆகிய இரண்டு ஆண்டு சாதனையாளர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படும். அதேநேரத்தில் தேசம் வளைத்தளம் சிங்கப்பூர், இந்தியா, இலங்கை, மொரிசியஸ் போன்ற நாடுகளிலும் செயல்படுவதால் அந்நாட்டு சாதனையாளர்களுக்கும் அனைத்துலக பிரிவில் விருதுகள் வழங்கப்படும் என்றார் குணாளன் மணியம்.

இந்த விருது விழா நிகழ்வுக்கு மாசா பல்கலைக்கழகம் முதன்மை ஆதரவாளராக இருக்கிறது. அதன்பிறகு தமிழ்நாடு, மதுரையை சேர்ந்த சத்தியம் குழுமத்தின் தோற்றுநர், இயக்குநர் திரு.செந்தில் ஆதரவிலும் இந்நிகழ்வு நடைபெற்று வருகிறது. மேலும் கிள்ளான், குளோ ஆசியா நிறுவன உரிமையாளல் ஐயப்பன் முனியாண்டி, சினி சத்ரியா நிறுவன இயக்குநர் டாக்டர் செல்வகுமார், திரு்பாரதிராஜா உள்ளிட்ட பலரும் ஆதரவு வழங்கியிருக்கிறார்கள்.

கடந்த 2009இல் தேசம் பத்திரிகையை தொடங்கிய குணாளன் மணியம், கடந்த 2015இல் தேசம் வளைத்தளத்தை தொடங்கினார். அதன்பிறகு 2018இல் தேசம் தொலைக்காட்சியை தொடங்கினார். தேசம் என்றால் குணாளன் மணியம், குணாளன் மணியம் என்றால் தேசம் என்று சொல்லும் அளவுக்கு மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார் குணாளன் மணியம். உண்மை, உழைப்பு, உயர்வு தாரக மந்திரம் தடைக்கல்லை படிக்கல்லாக்கி வெற்றி கண்டவர் தேசம் குணாளன் மணியம்.

மலேசிய கலைஞர்களுடன் குணாளன் மணியம்

தேசம் பத்திரிகை- தேசம் வலைத்தளம், தேசம் தொலைக்காட்சி என்று மின்னியல் ஊடகத் துறையில் வெற்றி கண்டு வரும் குணாளன் மணியம் உண்மை, உழைப்பு, உயர்வு எனும் தாரக மந்திரத்தில் தடைக்கல்லை படிக்கல்லாக்கி வெற்றி கண்டவர்.

தேசம் பத்திரிகை கடந்த 31.8.2009இல் நாட்டின் சுதந்நிர தினத்தில் தொடங்கப்பட்டது. தேசம் பல சோதனைகளை சந்தித்திருந்தாலும் அந்த சோதனைகள் சாதனைகளாகத்தான் மாறியுள்ளன. ஆயிரம் சோதனைகள் வந்தாலும் தேசத்தின் இலக்கு மாறாது. உண்மை, உழைப்பு, உயர்வு என்ற தாரக மந்திரத்தில் நாட்டிற்காகவும் இந்திய சமுதாயத்திற்காகவும் தேசம் பத்திரிகை-தேசம் வலைத்தளம், தேசம் தொலைக்காட்சி ஊடகத்தின் வெற்றிப் பயணம் தொடரும் என்று குணாளன் மணியம் கூறியுள்ளார்.

பத்திரிகைத் துறையில் 27 ஆண்டுகள் அனுபவம் கொண்டுள்ள குணாளன் மணியம் கடந்த 1990ஆம் ஆண்டில் “தினமுரசு” பத்திரிகையில் சாதாரண நிருபராக ஊடகவியலாளர் பணியை தொடங்கினார். அதன்பிறகு 1991இல் மலேசிய நண்பன் பத்திரிகையில் நிருபர் பணியைத் தொடர்ந்தார். அப்பத்திரிகையில் தொடர்ந்து 20 ஆண்டுகள் பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். இதில் 10 ஆண்டுகள் மலேசிய நண்பனில் துணை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

அதன் பிறகு மக்கள் ஓசை பத்திரிகையில் ஓராண்டு காலம் பணியாற்றினார். இந்நிலையில் சொந்தமாக பத்திரிகை நடத்த வேண்டும் என்ற லட்சியத்தில் கடந்த 31.8.2009இல் தேசம் பத்திரிகையை தொடங்கினார்.

இந்த ஊடகப் பயணத்தில் குணாளன் மணியம் அப்போதைய பிரதமரும் இந்நாள் பிரதமருமான துன் டாக்டர் மகாதீர் முகமட், அப்போதைய துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், முன்னாள் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின், முன்னாள் பிரதமர் துன் அகமட் அப்துல்லா படாவி, முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் என்று பல பிரதமர், துணைப் பிரதமர்களிடம் சிறந்த தமிழ் பத்திரிகையாளர் விருது பெற்றுள்ளார்.

கடந்த 1998இல் முன்னாள் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களிடம் சிறந்த பத்திரிகையாளர் விருது பெற்றுள்ளார். தொடர்ந்து முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட், முன்னாள் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின், நஜிப் துன் ரசாக் ஆகியோரிடம் பலமுறை சிறந்த பத்திரிகையாளர் விருது பெற்றுள்ள குணாளன் மணியம் ஆற்றல்மிக்க, துடிப்புமிக்க பத்திரிகையாளர் என்ற அடைமொழியோடு இன்றளவும் செயல்பட்டு வருகிறார் என்பது மலேசிய மக்கள் அறிந்த உண்மை.

இந்த “தேசம் சாதனையாளர் விருது விழாவிற்கு ஆதரவாளர்களையும் எதிர்பார்க்கப்படுகின்றார்கள். ஆர்வமுள்ளவர்கள் கீழ்க்காணும் கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 016-5214985.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன