அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > எனது வாழ்வில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியவர் தாயாரே!  -துன்  மகாதீர்
அரசியல்முதன்மைச் செய்திகள்

எனது வாழ்வில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியவர் தாயாரே!  -துன்  மகாதீர்

கோலாலம்பூர், ஜூலை 10-

தமது வாழ்க்கையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியவர் நினைவில் வாழும்  தமது அன்புத் தாயார் வான் தெம்பாவான் வான் ஹானாபியே என்கிறார் இன்று தமது 94 ஆவது அகவையை எட்டியிருக்கும் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது.

“அவர் என்னைச் சீராட்டி வளர்த்தார். எனக்கு நற்பண்புகளைக் கற்றுக் கொடுத்தார். நான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் எனக்குப் போதித்தார்” என்று பெர்னாமா வானொலிக்கு அளித்த சிறப்பு பேட்டியில் மகாதீர் குறிப்பிட்டார்.

தமது நீண்ட ஆயுளின் ரகசியம் குறித்து கேட்கப்பட்டபோது உணவு உள்பட. எல்லா விவகாரங்களிலும் மிதமான முறையைக் கடைபிடித்து வருவதோடு எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பதாகவும் மகாதீர் சொன்னார். ” நான் எனது உடல் எடையை அணுக்கமாகக் கண்காணித்து வருவேன். அதே போல உண்ணும் உணவிலும் அதிக கவனம் செலுத்துவேன். நாம் சுறுசுறுப்பாக இல்லாவிட்டால் உடல் மற்றும் மனோ ரீதியில்  பாதிப்படைவோம். சுறுசுறுப்பாக இருக்கும்போது எல்லாமே சரியாக இயங்கும் என்பது எனது எண்ணம்” என்றார் அவர்.

நேரம் கிடைக்கும்போது படிப்பது, எழுதுவது மற்றும் சில பயிற்சிகளில் ஈடுபடுவதுண்டு. இளம் பருவ  வாழ்க்கை மிகவும் எளிமையாக இருந்ததை நினைவு கூர்ந்த மகாதீர்  பள்ளி, வீடு மற்றும் அலோர்ஸ்டாரில் பல்லின மக்கள் மத்தியில் வாழ்ந்த இனிய  நினைவலைகளையும் பகிர்ந்து கொண்டார்.

அந்தக் காலத்தில் குல்லா மற்றும் வெண்கல சாதன  கடைகளைத் தவிர்த்து மலாய்க்காரர்கள் வேறு எந்த வியாபாரத்திலும் ஈடுபடவில்லை என்றார் மகாதீர். மலாய்க்காரர்களின் குணநலன்கள் மற்றும் அவர்களின் மதிப்பீட்டு முறையை மாற்றுவதில் தாம்  தோல்வி அடைந்திருப்பதாக அவர்  கூறினார்.

இவர்கள் போட்டி போட்டுக் கொண்டு முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் இவர்களை மாற்றுவதற்கு தாம் பெரும் முயற்சி மேற்கொண்டதாகவும் எனினும்  இவர்களில் பெரும்பாலோர் அவர்களுக்கு விருப்பமான வழியையே தொடர்ந்து பின்பற்றி வருவதாகவும்  அவர் குறிப்பிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன