ஒற்றுமையும் ஒருமைப்பாட்டு உணர்வும் இருவிழிகளைப் போன்றன!- அமைச்சர் பொன்.வேதமூர்த்தி

கோலாலம்பூர், ஜூலை 12-

மலேசியர் அனைவரையும் ஒற்றுமையும் ஒருமைப்பாட்டு உணர்வும் சிறு வயது முதலே ஆட்கொண்டிருப்பதுதான் நம் நாட்டின் தனிச் சிறப்பு எப்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி பேசினார்.

‘இளையோர்தம் விழிவழியே அருள்நிறை-அபரிமித- அழகுமிகு மலேசியா’ என்னும் கருப்பொருளுடன் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியை, கோலாலம்பூர், பிரிக்ஃபீல்ட்சில் தொடக்கி வைத்து உரையாற்றியபோது, வேற்றுமையில் ஒற்றுமையை நிலைநாட்டும் மலேசிய மக்களின் சகிப்புத் தன்மையும் அனுசரணைத் தன்மையும் நாட்டை இன்னும் உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்லும் என்று தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான அவர் குறிப்பிட்டார்.

பௌத்த மகா விகாரா, சிரியா ஒர்தோடொக்ஸ் தேவாலயம், பாத்திமா மாதா தேவாலயம், மலேசிய லூத்ரன் தேவாலயம், தமிழ் மெதடிஸ்ட் மாதாக் கோயில், கௌத்தியா பள்ளிவாசல், பிரிக்பீல்ட்ஸ் பள்ளிவாசல், சாம் கோவ் தோங், அருள்மிகு சிவன் ஆலயம், அருள்மிகு வீர அனுமான் ஆலயம், அருள்மிகு முனீஸ்வரர் கோயில், அருள்மிகு கிருஷ்ணர் ஆலயம், அருள்மிகு கந்தசாமி ஆலயம், புனித ரோசாரி தேவாலயம் ஆகிய வழிபாட்டு தலங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்த வைத்த அமைச்சர், “பக்குவப்பட்ட மனமும் அடக்கமான செயலும்தான் அமைதியான வாழ்க்கைக்கு அடித்தளம் என்று குறிப்பிட்டார்.