புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > லோங்ஸ்டாப்பின் விலை 5 கோடியா ? அதிர்ச்சியில் மென்செஸ்டர் யுனைடெட் !
விளையாட்டு

லோங்ஸ்டாப்பின் விலை 5 கோடியா ? அதிர்ச்சியில் மென்செஸ்டர் யுனைடெட் !

மென்செஸ்டர், ஜூலை.12 –

நியூகாசல் யுனைடெட் கிளப்பின் மத்திய திடல் ஆட்டக்காரர் ஷான் லோங்ஸ்டாப்பை வாங்க மென்செஸ்டர் யுனைடெட் திட்டமிட்டுள்ளது. எனினும் அந்த ஆட்டக்காரருக்கு ஐந்து கோடி ஈரோ டாலரை விலையாக நிர்ணயித்துள்ள நியூகாசல் யுனைடெட்டின் முடிவு மென்செஸ்டர் யுனைடெட்டை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் நியூகாசல் யுனைடெட் அணியில் வெறும் ஒன்பது ஆட்டங்களை மட்டுமே தொடங்கியுள்ள லோங்ஸ்டாப்புக்கு இரண்டு முதல் இரண்டரை கோடி ஈரோ டாலரை மட்டுமே தொடக்க விலையாக மென்செஸ்டர் யுனைடெட் நிர்ணயம் செய்திருந்தது.

இருப்பினும் லோங்ஸ்டாப்புக்கு அதிக விலையை நிர்ணயம் செய்துள்ள நியூகாசல் யுனைடெட் நிர்வாகத்தின் முடிவு மென்செஸ்டர் யுனைடெட்டுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கிறிஸ்டல் பேலசில் இருந்து தற்காப்பு ஆட்டக்காரர் ஏரோன் வான் பிஸ்சாகாவை ஐந்து கோடி டாலர் கொடுத்து விலைக்கு வாங்கிய மென்செஸ்டர் யுனைடெட் அதே விலையை தனது ஆட்டக்காரருக்கும் வழங்க வேண்டும் என நியூகாசல் யுனைடெட் எதிர்பார்க்கிறது.

இரண்டு தரப்புகளுக்கும் இடையிலான பேச்சுகள் சுமூகமான தீர்வை எட்டவில்லை என்றால், மென்செஸ்டர் யுனைடெட் இதர மத்திய திடல் ஆட்டக்காரருக்கு குறி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  கடந்த ஜனவரி மாதம் மாரோன் பெலாய்னியை விற்ற மென்செஸ்டர் யுனைடெட் கோடை காலத்தில் ஆண்டர் ஹெரேராவையும் இழந்துள்ளது. இதனால் புதிய மத்திய திடல் ஆட்டக்காரருக்கு நிர்வாகி ஓலே கன்னர் சோல்ஜ்ஸ்கர் வலை வீசுகிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன