புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > எஞ்சியுள்ள அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற பேரா இலக்கு !
விளையாட்டு

எஞ்சியுள்ள அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற பேரா இலக்கு !

ஈப்போ, ஜூலை.12-

மலேசிய சூப்பர் லீக் கால்பந்துப் போட்டியில் வியாழக்கிழமை நடந்த ஆட்டத்தில் பேரா 3- 2 என்ற கோல்களில் சிலாங்கூரைத் தோற்கடித்தது. இந்நிலையில் லீக் போட்டியில் எஞ்சியுள்ள அனைத்து ஆட்டங்களிலும் வெற்றிப் பெற பேரா கால்பந்து அணி இலக்குக் கொண்டுள்ளது.

ஜூலை 27 ஆம் தேதி மலேசிய எப்.ஏ கிண்ண கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டம் நடைபெறவிருக்கும் வேளையில், அனைத்து ஆட்டங்களிலும் வெற்றிப் பெற பேரா அணி முனைப்புக் காட்ட வேண்டும் என அதன் பயிற்றுனர் மெஹ்மேட் டுரோகோவிக் தெரிவித்துள்ளார்.

சிலாங்கூருக்கு எதிரான ஆட்டத்தில் இரண்டு கோல்களை விட்டிருந்தாலும், சிலாங்கூரை வீழ்த்துவது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல என டுரோகோவிக் தெரிவித்தார். குறிப்பாக சிலாங்கூர் அணி சிறந்த இறக்குமதி ஆட்டக்காரர்களைக் கொண்டிருப்பதையும் அவர் சுட்டி காட்டினார்.

இந்த வெற்றியின் மூலம், பேரா 30 புள்ளிகளுடன் பட்டியலில் ஆறாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. ஜூலை 27 ஆம் தேதி ஷா ஆலாம் அரங்கில் நடைபெறவிருக்கும் எப்.ஏ கிண்ண இறுதி ஆட்டத்தில் பேரா அணி, கெடாவை எதிர்கொள்ளவிருக்கிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன