புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > லோரேன் கொசியன்லிக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை !
விளையாட்டு

லோரேன் கொசியன்லிக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை !

லண்டன், ஜூலை.12 – 

அர்செனல் கால்பந்து அணியின் அமெரிக்க சுற்றுப் பயணத்தை தவிர்த்துள்ள அதன் கேப்டன் லோரேன் கொசியன்லி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 33 வயதுடைய கொசியன்லி அர்செனலை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளார்.

பிரான்சின் போர்ட்டோ கிளப்பிற்கு திரும்ப முடிவு செய்துள்ள கொசியன்லி, இலவசமாகவே அந்த கிளப்பில் இணைய எண்ணம் கொண்டுள்ளார். ஆனால் அவரின் எண்ணத்துக்கு அர்செனல் முட்டுக்கட்டைப் போட்டுள்ளது. கொசியன்லியை விட்டுக்கொடுக்க அர்செனல் தயாராக இல்லை.

அர்செனல் நிர்வாகத்தின் முடிவினால் அதிருப்தி அடைந்துள்ள கொசியன்லி ,  பருவத்துக்கு முந்தையப் பயிற்சிக்காக அமெரிக்கா சென்றுள்ள அர்செனல் அணியில் இணைய மறுத்துவிட்டார். அவருடைய நடவடிக்கை அர்செனல் அணிக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

கொசியன்லிக்கு உரிய விலைக் கொடுக்கப்பட்டால் மட்டுமே, அவரை விற்பது தொடர்பில் அர்செனல் ஆலோசிக்கும் என கூறப்படுகிறது. அதேவேளையில் கொசியன்லி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி என்றும் அர்செனல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன