வியாழக்கிழமை, நவம்பர் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > ‘ஆடப்பிறந்தோம்’ நவரச நடன விழா
சமூகம்முதன்மைச் செய்திகள்

‘ஆடப்பிறந்தோம்’ நவரச நடன விழா

ஈப்போ, ஜூலை 15-

பேராக், தெலுக் இந்தானில் இயங்கிவரும் நாடறிந்த சிறந்த நடன குழுக்களில் ஒன்றான ‘ஸ்ரீ அக்னி’ நடனக்குழுவின் 15ம் ஆண்டு கலைத்துறை நிறைவையொட்டி ‘ஆடப்பிறந்தோம்’ என்ற தலைப்பிலான நடன விழாவொன்று மிக கோலாகலமாக நடத்தப்பட உள்ளது.

எதிர்வரும் 27/7/19 சனிக்கிழமை, தெலுக் இந்தான் ஸ்ரீ வெள்ளை விநாயகர் ஆலய மண்டபத்தில், மாலை 6.00 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடைப்பெறும் இவ்விழாவில் மிகச்சிறந்த கலைஞர்கள் தங்களின் படைப்புகளை வழங்கவுள்ளனர். நவரச பரிமாணங்களில் கண்கவர் நடனங்கள் தான் இவ்விழாவின் தனிச்சிறப்பாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை. நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து புறப்பட்டு வந்து கலந்துகொள்ளும் அனைத்து வருகயாளர்களுக்கும் இரவு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

‘மகிழம்பூ’ கலைசேகர் மற்றும் விக்னேஸ்வரி ஆகியோரின் இனிய தமிழ் அறிவிப்புகளுடன் மலரவிருக்கும் இவ்விழாவின் முத்தாய்ப்பான அங்கமாக பேராக் மாநில அரசாங்கத்தின் கீழ் இயங்கும் கலாச்சார இலாகாவின் ஆதரவோடு ஸ்ரீ அக்னி நடக்குழுவின் 50 மாணவ மாணவியருக்கு மிக தரமான முறையில் பட்டமளிப்பு வைபவமும் நடைபெறவுள்ளது.

“ஆர்வத்துடன் பங்களிப்புகளை வழங்கிய/வழங்கிவரும் நடனமணிகளுக்கு தக்க அங்கீகாரங்கள் கிடைக்கப்பட்டால் தான் அவர்களின் எதிர்காலமும் அர்த்தபூர்வமானதாக திகழும்” என்கின்றனர் ஸ்ரீ அக்னி தம்பதிகள் என போற்றப்படும் குழுவின் தோற்றுனர்களான திரு.திருமதி முருகன் கலா இருவரும்

மேற்கல்வி கூடங்களில் நடப்பது போலவே ஒரு பட்டமளிப்பு விழா, மலேசிய வரலாற்றில் இதுவே முதன் முறையாக நம்ம நடனமணிகளுக்கு அமையவிருக்கிறது என்றால் அது மிகையல்ல. இத்தகைய உன்னத ஏற்பாட்டை மேற்கொள்ளும் ஶ்ரீ அக்னி குழுவினருக்கு நமது ஒத்துழைப்பை நல்கும் பொருட்டு, அனைவருமே இவ்விழாவிற்கு அன்போடு அழைக்கப் படுகின்றோம்.

முற்றிலும் இலவசமாக நடக்கவுள்ள இவ்விழா குறித்த தகவல்களை பொதுமக்கள் பலருக்கும் தெரிவிக்க, இந்த ‘லின்கை’ (link) பரவலாக பகிரும்படி ஏற்பாட்டு குழுவினர் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றனர்.  மேல் விபரங்களுக்கு திரு.முருகன் அவர்களை 016- 5542955 என்ற எண்களில் அழைக்கலாம்.

3 thoughts on “‘ஆடப்பிறந்தோம்’ நவரச நடன விழா

  1. ‘மகிழம்பூ’ கலைசேகர்

    நன்றி ஆநேகன்.

    யாவரும் வந்து கலந்துக்கொள்ளுங்கள்.
    அங்கே சந்திப்போம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன