ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 17, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > தமிழ்ப்பள்ளி மாணவர்கள் உலக அளவில் சாதிப்பது மகிழ்ச்சி அளிக்கின்றது! டாக்டர் சேவியர் ஜெயக்குமார்
சமூகம்முதன்மைச் செய்திகள்

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் உலக அளவில் சாதிப்பது மகிழ்ச்சி அளிக்கின்றது! டாக்டர் சேவியர் ஜெயக்குமார்

புத்ராஜெயா ஜூலை 15-

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மற்ற இன பள்ளி மாணவர்களுக்கு இணையாக உலகளாவிய நிலையில் அறிவியல் சார்ந்த போட்டிகளில் சாதனை படைப்பது தமக்குப் பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக நீர், நிலம் இயற்கை வள அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் மகிழ்ச்சி தெரிவித்தார்.

தொழில் புரட்சி 4.0 நோக்கி நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். அனைத்தும் எந்திரமயமாகும் இக்காலகட்டத்தில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அறிவியல் பாடத்தில் சிறந்த அடைவு நிலையை பதிவு செய்வது சிறந்த எதிர்காலத்தை அவர்களுக்கு அமைத்து தரும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

உலகளாவிய நிலையில் ரவாங் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சாதனை!

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் உலக அரங்கில் சாதனை படைப்பது தற்போது சாதரண விஷயமாகி விட்டது. இவர்கள் படைக்கும் சாதனை தமிழ்ப் பள்ளிகள் மீது பெற்றோர்களுக்கு புது நம்பிக்கையை உண்டாக்குகின்றது. இவர்களின் சாதனை வரும் காலங்களிலும் தொடர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

முன்னதாக மலேசிய இளம் அறிவியல் ஆய்வாளர்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் கோலாலம்பூரில் நடைபெற்ற அறிவியல் ஆய்வு தொடர்பான போட்டியில் தங்கப்பதக்கத்தையும் சிறப்பு விருதையும் வென்ற ரவாங் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும், தாமான் மெலாவாத்தி மாணவர்களுக்கும் அவர் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

உலகளாவிய அறிவியல் போட்டி : தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு தங்கப்பதக்கம்!

மாணவர்களின் சாதனையில் ஆசிரியர்களுக்கு எவ்வளவு பங்கு இருக்கிறதோ அதே அளவிற்கு பெற்றோர்களுக்கும் பங்கு உண்டு. சாதனை படைத்த மாணவர்களுக்கு உந்து கோலாக இருந்த பெற்றோர்கள் மற்ற பெற்றோர்களுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறார்கள் என அவர் புகழாரம் சூட்டினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன