ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத்தின் ஆலய சந்நிதிகள் மூடப்படும்!

கோலாலம்பூர் ஜூலை 15-

வருகின்ற புதன் கிழமை ( ஜூலை 17 ) சந்திர கிரகணம் ஏற்படுவதை முன்னிட்டு அவ்வேளையில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத்தின் கீழ் இயங்கும் கோர்ட்டுமலை ஸ்ரீ கணேசர் ஆலயம், கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் மற்றும் பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம் ஆகிய மூன்று ஆலயங்களில் உள்ள அனைத்து சந்நிதிகளும் மூடப்படும் என்று தேவஸ்தானத்தின் பொதுத் தொடர்பு வியூக இயக்குனர் திரு. சிவக்குமார் கூறினார்.

பஞ்சாங்க கணிப்பின் படி வரும் புதன் கிழமை அதிகாலை 4.02 மணி முதல் காலை 7.00 மணி வரை சந்திர கிரகணம் ஏற்படுவதாக குறிப்பிடப் பட்டுள்ளது. இந்த நேரத்தில் எவ்விதமான பூஜைகளோ அபிஷேகமோ நடைபெறாது. காலை 7.00 மணிக்குப் பின் அபிஷேகமும் பூஜைகளும் வழக்கம்போல் நடைபெறும் என்பதனை பக்தர்கள் அனைவருக்கும் தேவஸ்தானம் தெரிவித்துக்கொள்கிறது. இச்செய்தியை தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ. ஆர். நடராஜாவும் உறுதிப்படுத்தினார்.