கோலாலம்பூர் ஜூலை 15,

மலேசியாவில் புகழ்பெற்ற கலைஞர்களில் ஒருவரான ராஜலெட்சுமி என்ற ராஜி இன்று காலமானார்.  நாட்டில் சிம்ரன் என ரசிகர்களால் அன்பாக அழைக்கப்பட்ட அவர் இன்று காலை உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

மலேசியாவின் முன்னணி கலைஞரான கானாவுடன் இணைந்து பல திரைபடங்களில் இவர் நடித்திருக்கின்றார். குறிப்பாக தைப்பூச காலங்களில் இவரது படங்கள் வெளிவந்தால் ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டம்தான்.

தமது தோற்றத்தை பொருட்படுத்தாமல் இவர் செய்த நகைச்சுவை காட்சிகள் மலேசிய ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

பெருநாள் காலங்களில் தொலைக்காட்சியில் இவரது நிகழ்ச்சிகள் ஒளியேறாமல் இருந்ததே இல்லை. மூச்சுத் திணறல் காரணமாக அவரின் உயிர் பிரிந்ததாக கூறப்பட்டது.

அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கும் வேளையில், அவரது குடும்பத்தினருக்கு அநேகன் செய்தித்தளம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.