ஜி.எஸ் டி. பணம் காணவில்லை என்றால் அது எங்கே போனது? – பிரதமர் கேள்வி

புத்ரா ஜெயா ஜூலை 16-

வர்த்தகர்களிடம் திரும்பத் தர வேண்டிய 19 பில்லியன் வெள்ளி ஜிஎஸ்டி பணம் திருடப்படவில்லை என பொது கணக்காய்வு குழு கூறியிருப்பதால் அந்தப் பனத்தை அரசாங்கம் பார்க்க விரும்புவதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார்.

இந்த பணம் காணவில்லை என்றால் அந்த பணம் இப்போது எங்கே இருக்கிறது என அரசாங்கம் தெரிந்து கொள்ள விரும்புவதாக பிரதமர் தெரிவித்தார். அந்த பணத்தை நாம் கண்டுபிடித்தால் அது காணாமல் போகவில்லை என்பது உண்மையாகிவிடும்.

அதே வேளையில் அந்த பணத்தை நாம் கண்டுபிடிக்க முடியாவிட்டால் அது காணாமல் போய்விட்டது என்றுத்தான் அர்த்தம் என பெர்சத்து உச்ச மன்ற கூட்டத்திற்கு தலைமையேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் டாக்டர் மகாதீர் இதனைத் தெரிவித்தார்.

நிதி அமைச்சர் லிம் குவான் எங் கூறிக் கொண்டது போல 19 பில்லியன் வெள்ளி திரும்பச் செலுத்த வேண்டிய ஜிஎஸ்டி பணம் இதற்கு முந்திய அரசாங்கத்தினால் கொள்ளையடிக்கப்படவில்லை என பிஎஸ்சி எனப்படும் பொது கணக்கு குழு நாடாளுமன்ற நாடகநாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் கூறியிருந்தது.