ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 26, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > மலேசிய கலை துறையின் முன்னணி ஒப்பனைக் கலைஞர் கோமதி காலமானார்
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

மலேசிய கலை துறையின் முன்னணி ஒப்பனைக் கலைஞர் கோமதி காலமானார்

கோலாலம்பூர் ஜூலை 16-

மலேசிய கலைத்துறையில் நன்கு அறிமுகமான ஒப்பனைக் கலைஞர் கோமதி நேற்று காலமானார். அவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்று என மலேசியாவின் முன்னணி கலைஞர்கள் தங்களின் அனுதாபங்களை பகிர்ந்து வருகின்றனர்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு ஒப்பனைக் கலைஞராக பணியாற்றிய இவர் பல திரைப்படங்களிலும் ஒப்பனைக் கலைஞராக பணியாற்றியுள்ளார். மலேசிய கலைத்துறைக்கு நன்கு அறிமுகமான இவர் அனைவரிடமும் அன்பாக பழக கூடியவர்.

கோம் பியூட்டி ஸ்டூடியோ எனும் நிறுவனத்தையும் இவர் நடத்தி வந்தார். மிக முக்கியமாக மலேசியாவில் உள்ள அனைத்து கலைஞர்களுக்கும் இவர் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் திடீரென உயிரிழந்தது மலேசிய கலைத்துறையை வெகுவாக பாதித்திருக்கிறது.

முன்னதாக நகைச்சுவைக் கலைஞர் சிம்ரன் ராஜி காலமான அதே நாளில் இவரும் இறைவனடி சேர்ந்து இருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய அநேகன் இணையதள பதிவேடு இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன