புதன்கிழமை, டிசம்பர் 11, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > அர்செனலின் புதிய கேப்டன் ரோப் ஹோல்டிங் ?
விளையாட்டு

அர்செனலின் புதிய கேப்டன் ரோப் ஹோல்டிங் ?

லண்டன், ஜூலை.19-

அர்செனல் கால்பந்து அணியின் கேப்டன் லோரேன் கொசியன்லி அந்த அணியை விட்டு வெளியேறவிருக்கும் வேளையில், அவருக்குப் பதில் இளம் ஆட்டக்காரர் ரோப் ஹோல்டிங்கை கேப்டனாக நியமிக்க நிர்வாகி, உனய் எமெரி முடிவு செய்துள்ளதாக பிரிட்டன் ஊடகங்கள் கூறுகின்றன.

பருவத்துக்கு முந்தைய பயிற்சிக்காக அர்செனல், அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வேளையில், 33 வயதுடைய லோரேன் கொசியன்லி அந்த அணியில் இணைந்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடதக்கது. அர்செனல் அணியை விட்டு வெளியேற முடிவு செய்துள்ள கொசியன்லி , மீண்டும் பிரான்ஸ் லீக் போட்டிக்குத் திரும்ப திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில் அர்செனல் அணிக்கு குறைந்தது ஐந்து கேப்டன்களை நியமிக்க உனய் எமெரி முடிவு செய்துள்ளார். அந்த ஐவரில் ஒருவராக ரோப் ஹோல்டிங் இடம்பெறுவார் என கூறப்படுகிறது. ஐந்து கேப்டன்களில் ஒருவர்  பிரிட்டிஷ்காராக இருக்க வேண்டும் என தாம் முடிவு செய்திருப்பதாக எமெரி தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன