வியாழக்கிழமை, ஜனவரி 23, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > இன்னும் 3 ஆண்டுகள் லிவர்புல் கிளப்பில் நீடிப்பேன் – குலோப் !
விளையாட்டு

இன்னும் 3 ஆண்டுகள் லிவர்புல் கிளப்பில் நீடிப்பேன் – குலோப் !

வாஷிங்டன், ஜூலை.19-

கடந்த ஜூன் மாதம் ஆறாவது முறையாக ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ணத்தை வென்ற லிவர்புல் கிளப்பில், குறைந்தப்பட்சம் இன்னும் மூன்று ஆண்டுகள் நீடிப்பேன் என அதன் நிர்வாகி ஜூர்கன் குலோப் உறுதி அளித்துள்ளார். குலோப்பின் இந்த அறிவிப்பு லிவர்புல் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

2022 ஆம் ஆண்டில் தமது ஒப்பந்தம் நிறைவுப் பெற்றவுடன் தாம் லிவர்புல் கிளப்பை விட்டு வெளியேறப்போவதாக கூறப்படும் ஆருடங்கள் குறித்து குலோப் இவ்வாறு கருத்துரைத்தார். ஒப்பந்தம் முடிவடைய இன்னும் மூன்று ஆண்டுகள் இருக்கும் பட்சத்தில் அதற்குள் அதனைப் பற்றி பேச வேண்டாம் என குலோப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

லிவர்புல் கிளப்பின் நிர்வாகி பொறுப்பில் இருந்து விலகும் பட்சத்தில் குலோப், ஜெர்மனி தேசிய கால்பந்து அணியின் பயிற்றுனராக பொறுப்பேற்பார் என அவரின் முகவர் மார்க் கொசிக்கே கடந்த மாதம் தெரிவித்திருந்தார். எனினும் லிவர்புல் கிளப்பை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்வதில் தாம் கவனம் செலுத்தி வருவதால், தற்போது இதர விசயங்களைப் பற்றி தாம் சிந்திக்கவில்லை என குலோப் மேலும் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன