வியாழக்கிழமை, நவம்பர் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > யுவன்டசில் இணைந்தார் மாத்திஸ் டி லைட் !
விளையாட்டு

யுவன்டசில் இணைந்தார் மாத்திஸ் டி லைட் !

துரின், ஜூலை.19-

ஹாலந்தின் தற்காப்பு ஆட்டக்காரர் மாத்திஸ் டி லைட், இத்தாலியின் யுவன்டஸ் கிளப்பில் இணைந்துள்ளார். ஐரோப்பாவின் பல முன்னணி கிளப்புகள் மாத்திஸ் டி லைட்டை வாங்க ஆர்வம் காட்டிய வேளையில் 7 கோடியே 50 லட்சம் ஈரோ டாலர் தொகையில் அவர் யுவன்டஸ் கிளப்பில் இணைந்துள்ளார்.

யுவன்டஸ் கிளப்புடன் ஐந்து ஆண்டுகளுக்கான ஒப்பந்தத்தில் டி லைட் கையெழுத்திட்டுள்ளார். டி லைட்டுக்கான தொகை அடுத்து வரும் ஐந்து ஆண்டுகள் கட்டம் கட்டமாக செலுத்தப்படும் என யுவன்டஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. அதேவேளையில் கூடுதலாக ஒரு கோடியே 50 லட்சம் ஈரோ டாலர் தொகையும் யுவன்டஸ் கிளப்புக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், உலகில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட தற்காப்பு ஆட்டக்காரராக மாத்திஸ் டி லைட் விளங்குகிறார். இதற்கு முன்னர், லிவர்புல், வெர்ஜில் வான் டாய்க்கை வாங்க 8 கோடியே 40 லட்சம் ஈரோ டாலர் செலவிட்டது. அதேவேளையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ( 10 கோடி ஈரோ டாலர் ), கன்சாலோ ஹிகுவாய்ன் (  9 கோடி டாலர் ) பிறகு யுவன்டஸ் அதிக விலைக்கு வாங்கிய மூன்றாவது ஆட்டக்காரராக மாத்திஸ் டி லைட் விளங்குகிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன