ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 17, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > தமிழ்ப்பள்ளி மாணவர்களின் திறனை மேம்படுத்தும் பினாங்கு மாநில அளவிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டி
சமூகம்முதன்மைச் செய்திகள்

தமிழ்ப்பள்ளி மாணவர்களின் திறனை மேம்படுத்தும் பினாங்கு மாநில அளவிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டி

ஜோர்ஜ்டவுன், ஜூலை 21-

தமிழ்ப்பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் தேசிய அளவிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மலேசிய தித்தியான் டிஜிட்டல் இயக்கம், கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கம், மலேசிய சமூக கல்வி அறவாரியம், மலேசிய உத்தமம் ஆகிய அமைப்புகள் இணைந்து இப்போட்டியை வழிநடத்துகிறது. இதில் 5 போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன, அதில் தகவல் தொடர்புத் தொழில்நுட்பப் புதிர்ப்போட்டி மட்டுமே மாநில அளவில் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், பினாங்கு மாநில அளவிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டி, நேற்று சனிக்கிழமை பினாங்கு மெட்ரிகுலேஷன் கல்வி மையத்தில் சிறப்பாக நடைப்பெற்றது.

கடந்த வருடம் பினாங்கு மாநிலத்தில் எல்லா தமிழ்ப்பள்ளிகளும், மாணவர்களும் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டியின் கலந்துக் கொண்டனர். அதே போல் போல் அடுத்த வருடமும் அனைத்து தமிழ்பள்ளிகளும் இந்த தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டியில் கலந்துக்கொள்ள வேண்டும் என பினாங்கு மாநில 2019 ஆம் ஆண்டின் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டியின் ஏற்பாட்டுக் குழு தலைவர் திரு. இரவிசந்திரன் செல்லகண்ணு வலியுறுத்தினார்.

மேலும் மாணவர்களின் வசதிக்காக அடுத்த வருடம் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டி, மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் நடத்த வழிவகை செய்யப்படும். இதன் மூலம் மாணவர்கள் தொழில்நுட்ப்பத் துறையில் அதிக ஆர்வத்துடன் கலந்துக் கொள்ள முடியும். மாணவர்களை ஊக்குவித்து, இன்றைய போட்டிக்கு அழைத்து வந்த ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மேலும், இப்போட்டியை ஏற்பாடு செய்த தித்தியான் டிஜிட்டல் திட்டத்திற்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

நிகழ்வில் சிறப்புரை ஆற்றிய பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு கஸ்தூரிராணி பட்டு கூறுகையில், தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப்போட்டியினை ஏற்பாடு செய்த மலேசிய தித்தியான் டிஜிட்டல் திட்டத்திற்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். எதிர்வரும் காலங்களில் தொழில்நுட்பம் தொடர்பான போட்டிகளை நடத்த பினாங்கு மாநில அரசாங்கம் இணைந்து செயல்படக்கூடிய சாத்தியம் உள்ளதாக அவர்தம் உரையில் கூறினார். தொடர்ந்து இன்றைய தமிழ்பள்ளி மாணவர்கள் அவர்களிடம் இருக்கும் திறன்பேசிகளை கவனமாகவும், தகுந்த பாதுகாப்பு அம்சங்களுடன் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

 பல விதமான சமூதாய சீர்கேடுகளை விளைவிக்கும் செயல்கள் இந்த திறன்பேசிகளின் மூலம்தான் நடைப்பெறுகிறது. மாணவர்கள் இன்றைய தொழில்நுட்பத்தில் இருக்கின்ற பல நன்மை தீமைகளை அறிந்து மாணவர்கள் செயல்ப்பட வேண்டும், அதன் தொடர் வளர்ச்சியில் பல மாணவர்கள் சாதனைகளை புரிய வேண்டும். அவரின் உரையில் கல்வியின் அவசியத்தையும், அதன் தொடர் வளர்ச்சியும் பினாங்கு மாநிலத்தில் பார்க்க முடியும் என்று கூறினர்.

இவ்வாண்டு பினாங்கு மாநிலத்திருந்து 27 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 85 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 15 மாணவர்கள் வெற்றிப் பெற்றனர். தகவல் தொடர்பு தொழில்நுட்ப போட்டியில் மொத்தம் 5 போட்டிகள் உள்ளன. அதில் புதிர்ப்போட்டி மாநில நிலையில் நடத்தப்பட்டு, தேசிய நிலைக்கு மாணவர்கள் தேர்வு பெறுவர். தேசிய நிலையிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டியில் இருபரிமாண அசைவூட்ட போட்டி, வரைதல் போட்டி, அகப்பக்கம் வடிவமைத்தல் போட்டி, & ஸ்கேரேச் போட்டி உள்ளன. அனைத்து போட்டிகளிலும் மாநில நிலையில் மாணவர்கள் தேர்வு பெற்று, தேசிய நிலையிலான போட்டியில் மாணவர்கள் கலந்துக் கொள்வர்.

தேசிய நிலையிலான தகவல் தொடர்பு தொழில்நுட்ப போட்டி எதிர்வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி மலாயா பல்கலைகழக வளாகத்தில் நடைபெறும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன