ஆறு தூய்மைக்கேட்டை தடுப்பதில் அனைத்து தரப்பினரும் பங்கு வகிக்க வேண்டும்!- டாக்டர் சேவியர் ஜெயக்குமார்

புத்ராஜெயா, ஜூலை 22-

தேசிய முதன்மை சுத்திகரிக்கபடாத நீர் வளமாக ஆறுகள் திகழ்கின்றன. ஆறுகளுக்கு தூய்மைக்கேட்டை விளைவிக்கும் நடவடிக்கைகளைத் தடுப்பதில் அனைத்து தரப்பினர்களும் ஏஜென்சிகளும் பங்கு வகிக்க வேண்டும் என்று நீர், நிலம் மற்றும் இயற்கைவள அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

தூய்மைக்கேட்டினால் நீர் சுத்திகரிப்பு நிலையங்களை சிலாங்கூர் நீர் மேலாண்மை கடந்த வெள்ளிக்கிழமை ஜூலை 19ஆம் தேதி தொடங்கி மூடியதால் டாக்டர் சேவியர் ஜெயகுமார் மேற்கண்டவாறு கூறினார். முதன்மை நீர் சுத்திகரிப்பு நிலையங்களான சுங்கை சிலாங்கூர் 1, 2 மற்றும் 3 உட்பட ரந்தாவ் பஞ்சாங் ஆகியவற்றை சிலாங்கூர் நீர் மேலாண்மை மூடியது.

இந்த முதன்மை நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடிப்பட்டதால் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரிலுள்ள 5 லட்சம் பயனீட்டாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நீர், நிலம் மற்றும் இயற்கைவள அமைச்சின் கீழ் உள்ள ஏஜென்சிகளான சிலாங்கூர் நீர் மேலாண்மை, தேசிய நீர் சேவை ஆணையம், நீர் பாசனம் மற்றும் வடிகால் துறை, இண்டா வாட்டர் கூட்டமைப்பு ஆகியவை தூய்மைக்கேட்டை காரணத்தை கண்டறிய நேற்று சிலாங்கூர், பத்தாங் காலியில் சோதனை நடவடிக்கை மேற்கொண்டது.

இது தொடர்பில், ஒவ்வொரு அரசு நிறுவனத்தையும் குறிப்பாக உள்ளூர் அதிகாரிகள் ஆற்றங்கரையில் நடந்த நடவடிக்கைகளை கண்காணிக்கும் பணியை மேற்கொள்ள டாக்டர் சேவியர் ஜெயகுமார் விரும்பினார். உள்ளூர் அதிகாரிகள் அப்பகுதியில் சந்தேகத்திற்குரிய சம்பவங்களை அறிந்தால் தூய்மைகேட்டு சம்பவங்களைத் தவிர்க்க முடியும். ஆறு தூய்மைகேட்டிற்கு காரணமாக இருப்பவர்கள் மீதும் சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்.

அதே வேளையில், சுற்றுச்சூழல் துறைகளான எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றாம் அமைச்சு உட்பட மாநில அரசாங்கத்தின் கீழ் உள்ள ஏஜென்சிகளும் இது சம்பந்தமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நீர் சேவைகள் தொழில் சட்டம் 2006இன் கீழ் விசாரணை ஆவணங்களை தயார் செய்து தேசிய நீர் சேவை ஆணையம் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும். நீர்வளங்களை பாதுக்காப்பது குறிப்பிட்ட அரசு நிறுவனங்களின் பணி மட்டும் அல்ல. தூய்மையான நீர் மனிதனின் அடிப்படை தேவையாகும். எனவே, நீர் தூய்மைக்கேடு அடையாமல் இருப்பதை உறுதி செய்வது ஒவ்வொரு குடிமகனின் பணியாகும்.

தூய்மைக்கேடான ஆறுகளை சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிலாங்கூர் நீர் மேலாண்மை நீர் சேவையை கட்டம் கட்டமாக சேவை மீட்டமைக்கிறது. வரும் புதன்கிழமை ஜூலை 24ஆம் தேதிக்குள் முழுவதுமாக மீட்டமைக்கபடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

எஸ்.எஸ்.பி 1 நிலையத்தில் பணிகளை ஒத்திவைப்பதாக சிலாங்கூர் நீர் மேலாண்மை அறிவித்திருந்தது. முதலில் ஜூலை 23 முதல் ஜூலை 26 வரை நடத்த திட்டமிடப்பட்டது என நீர், நிலம் மற்றும் இயற்கைவள அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் டாக்டர் சேவியர் மேற்கொண்டவாறு தெரிவித்துள்ளார்.

(2)KENYATAAN_sungai tercemar gesa peranan semua pihak