ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 17, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > இந்தியா/ ஈழம் > வாரணாசியில் தடம் பதித்தது மலிண்டோ ஏர்..
இந்தியா/ ஈழம்உலகம்முதன்மைச் செய்திகள்

வாரணாசியில் தடம் பதித்தது மலிண்டோ ஏர்..

வாரணாசி ஜூலை 22-

தம் வாழ்நாளில் ஒருமுறையாவது காசியில் கால் பதித்து விட வேண்டும் என்பது தான் அனைத்து இந்துக்களின் மிகப் பெரிய கனவாக இருக்கிறது. அந்தக் கனவை நிறைவேற்றும் வகையில் வாரணாசிக்கு நேரடி விமானச் சேவையை தொடங்கி இருக்கின்றது மலிண்டோ ஏர்.

விமானப் போக்குவரத்துத் துறையில் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்ட மலிண்டோ ஏர் இந்தியாவிற்கு பயணம் செய்யும் பத்தாவது தளமாக இது திகழ்கின்றது. அதிலும் குறிப்பாக வாரணாசியில் முதன் முதலில் தடம் பதித்த மலேசிய விமானம் என்ற பெருமையையும் கொண்டிருக்கின்றது.

நியாயமான விலையில் தரமான சேவையை வழங்கி வருவதால் மக்கள் மத்தியில் மலிண்டோ ஏர் புகழ் பெற்றுள்ளது. விசாலமான இருக்கை மட்டுமின்றி பயணத்தின் போது உணவும் வழங்கப்படுகிறது. கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து வாரணாசிக்கு செல்வதற்கு 4 மணி 30 நிமிடம் ஆகிறது.

முன்பெல்லாம் வாரணாசிக்கு செல்ல வேண்டும் என்றால் டெல்லி அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கி அங்கிருந்து மற்றொரு விமானத்தின் மூலம் வாரணாசிக்கு செல்ல வேண்டும். அல்லது கல்கத்தாவில் தரை இறங்கி அங்கிருந்து செல்ல வேண்டும். இதனால் அதிக நேரம் விரயம் ஏற்படுவதாக பலர் கூறி வந்த நிலையில் வாரணாசிக்கு நேரடியாக விமான சேவையை தொடங்கி இருப்பது பெரும் மகிழ்ச்சி என மக்கள் கருதுகிறார்கள்.

வாரத்திற்கு மூன்று முறை மலிண்டோ ஏர் வாரணாசிக்கு தமது பயணத்தை மேற்கொள்கின்றது. செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை, சனிக்கிழமை என மூன்று நாட்கள் இரவு 7.05க்கு மலேசியாவிலிருந்து மலிண்டோ ஏர் வாரணாசி நோக்கி பயணமாகின்றது. அதே நாள் வாரணாசியில் இருந்து இரவு 10 10 க்கு புறப்பட்டு அதிகாலை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை மலிண்டோ ஏர் வந்தடையும்.

காசி விஸ்வநாதர் ஆலயத்தை தவிர்த்து தெற்கிழக்காசியாவில் இருக்கும் புத்த பிக்குகள் அதிகமாகமானவர்கள் வாரணாசிக்கு செல்கிறார்கள். அவர்கள் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு வந்து அங்கிருந்து நேரடியாக வாரணாசிக்கு செல்லக் கூடிய வாய்ப்பை மலிண்டோ ஏர் ஏற்படுத்தி தந்திருக்கிறது.

புது டில்லி, பம்பாய் கல்கத்தா அம்ரிட்சார், பெங்களூரு, சென்னை, திருச்சி, கொச்சி, திருச்சி ஆகிய அனைத்துலக விமான நிலையங்களை கடந்து பத்தாவது தளத்தில் தடம் பதித்து இருக்கின்றது மலிண்டோ ஏர்.

  • முக்தி தரும் நகரங்கள் ஏழு என்று கருட புராணம் சொல்கிறது. வாரணாசி, அயோத்தி, மதுரா, அரித்வார், காஞ்சி, உச்சையினி, துவாரகை என்பவையாம்.
  • வருணா(வருணை) ஆறும், அசி ஆறும் வடக்கிலிருந்தும், தெற்கிலிருந்தும் பாய்ந்து பின் இந்நகரில் கங்கை ஆற்றில் ஒன்று கூடிவதால் வாரணாசி என்ற பெயர் ஏற்பட்டது.
  • வாரணாசிக்கு ஆன்மீகச் சுற்றுலா செல்ல ஜாத்தா டிரெவல் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தருகின்றது.. அதன் முழு விவரம் அடுத்த கட்டுரையில் இடம்பெறும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன