அன்வாரின் அரசியல் செயலாளர், ஹாசிக் அப்துல்லா விடுதலை !

0
3

கோலாலம்பூர், ஜூலை.23-

பி.கே.ஆர். துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ அஸ்மின் அலியைத் தொடர்புப்படுத்தி பகிரப்பட்ட ஆபாச காணொளி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட, டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம்மின் அரசியல் செயலாளர் பார்ஹாஷ்  வாபா சல்வாடோர் ரிசால் முபாராக் இன்று மாலை விடுதலை செய்யப்பட்டார்.

விசாரணைக்கு உதவுப் பொருட்டு போலீஸ் கடந்த வாரம் பார்ஹாஷா கைது செய்திருந்தது. இந்நிலையில் அவருக்கான தடுப்பு காவல் முடிந்ததை அடுத்து இன்று மாலை 3.50 மணி அளவில் விடுதலை செய்யப்பட்டார். அந்த ஆபாச காணொளியில் இருப்பது தாம் தான் என்பதை பகிரங்கமாக அறிவித்த, ஹாசிக் அப்துல்லாவும்  10 நிமிடங்களுக்குப் பின்னர் ,  விடுதலை செய்யப்பட்டார்.

பார்ஹாஷை விடுதலை வரவேற்கும் நோக்கில் ஏறக்குறைய 100 பேர் டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் திரண்டிருந்தனர். பார்ஹாஷ் வெளியேறியதும் அவருக்கு மாலை அணிவித்து ரிபோர்மாசி என முழக்கமிட்டனர்.  கடந்த ஜூலை 16 ஆம் தேதி பார்ஹாஷ் கைது செய்யப்பட்டனர். அதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக ஹாசிக் கைது செய்யப்பட்டார்.