புதன்கிழமை, ஜனவரி 29, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > மலேசிய இந்திய ஊடகவியலாளர்கள் சங்கத்தின் திரைப்பட துறை பயிற்சி பட்டறை!
கலை உலகம்சமூகம்முதன்மைச் செய்திகள்

மலேசிய இந்திய ஊடகவியலாளர்கள் சங்கத்தின் திரைப்பட துறை பயிற்சி பட்டறை!

கோலாலம்பூர், ஜூலை 23-

மலேசிய இந்திய ஊடகவியலாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் திரைப்பட துறை தொடர்பான  பயிற்சிப் பட்டறை, ஜாலான் உலு கிள்ளான், ஈப்போ மற்றும் சுங்கைப்பட்டாணி ஆகிய மூன்று இடங்களில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

கதை, திரைக்கதை மற்றும் வசனம் எழுதுதல், தொகுப்பு, ஒளிப்பதிவு என ஒரு திரைப்படத்திற்குத் தேவையான அனைத்து அம்சங்கள் குறித்து இப் பயிற்சியில் கற்றுத் தரப்படும். பிரபல தென்னிந்திய திரைப்பட  உதவி இயக்குநரும்  இத்துறையில் பரந்த அனுபவம் கொண்டவருமான சம்பத் இப்பயிற்சியை வழங்கவிருக்கிறார்.

காலை மணி 10.00தொடங்கி மாலை மணி 4.00 வரை நீடிக்கும் இப்பயிற்சியில் தொடக்கத்தில்  இருந்து திரையரங்கு செல்லும் வரை ஒரு திரைப்படத்திற்குத் தேவையான அடிப்படை அம்சங்கள் குறித்து சம்பத்   விளக்கம் அளிப்பார். இப்பயிற்சி ஜூலை 26 ஆம் தேதி டிஎச் சுப்ரா சேவை மையம், 820, முதலாவது மாடி, ஜாலான் செகாராட், சுங்கைப்பட்டாணி, கெடாவில் நடைபெறும். தொடர்புக்கு சீலன் 012-4115047.

மறுநாள் 27 ஆம் தேதி 38,40 மேடான் இஸ்தானா பண்டார் ஈப்போ ராயா, ஈப்போ, பேராக் எனும் முகவரியில் இப்பயிற்சி நடைபெறும். தொடர்புக்கு பிரபாகரன் 018-5720800.  இதனைத் தொடர்ந்து 28 ஆம் தேதி,  பி. ரம்லி அரங்கம், கொம்ளெக்ஸ் ஸ்டூடியோ மெர்டேக்கா, ஜாலான் உலு கிள்ளான், சிலாங்கூரில் நடைபெறும். தொடர்புக்கு குமாரி சக்தி 011-39152116.

திரைப்பட துறையில் ஆர்வமுள்ளவர்கள் இப்பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டு பயனடையும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன