திருமணம் உட்பட இதர பொது நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு மண்டபங்களை நாடுவதில் மலேசிய இந்தியர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றார்கள். அனைத்து வசதிகளும் அடங்கிய ஒரு மண்டபம் தான் அவர்களின் முதல் தேர்வாக இருக்கின்றது. குறிப்பாக பெட்டாலிங் ஜெயா, ஷா ஆலம், கிள்ளான் ஆகிய பகுதிகளில் அதிகமான இந்தியர்கள் வசிக்கிறார்கள்.

தங்களின் திருமணங்களை அனைத்து வசதிகளும், சிறப்பு அம்சங்களுடன் அவர்களின் தேவையை நிறைவேற்றக்கூடிய ஒரு பொது மண்டபத்தில் நடத்த வேண்டும் என அனைவரும் விரும்பும் இக்காலத்தில் பல தரப்பட்ட பொது மண்டபங்கள் இந்த சுற்று வட்டாரத்தில் இருக்கின்றன. இதில் மக்களின் கவனத்தை ஈர்த்த குறிப்பாக அவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் எத்தனை பொது மண்டபங்கள் இருக்கின்றன என்பதை அநேகன் இணையதள பதிவேடு பட்டியலிட்டது. முதல் ஆய்வில் சிறந்த 10 மண்டபங்களை பட்டியலிட்டுள்ளோம்.

அதில் மக்களின் கருத்துக்களுக்கு இணங்க மக்களின் முதன்மை ஆதரவை பெற்று முதலிடத்தைப் பிடித்திருக்கிறது மிட்லெண்ட்ஸ் மாநாட்டு மண்டபம்.

1. மிட்லெண்ட்ஸ் மாநாட்டு மண்டபம் ஷா ஆலம்

ஷா ஆலம் செக்‌ஷன் 7இல் அமைந்திருக்கும் மிட்லெண்ட்ஸ் மாநாட்டு மண்டபம், இப்பகுதியில் மட்டுமின்றி பெட்டாலிங் ஜெயா, கிள்ளான் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு நன்கு அறிமுகமான பொது மாநாட்டு மண்டபம் ஆகும்.

அனைத்து வசதிகளும் அடங்கிய இந்த மண்டபத்தில் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு மக்கள் வெகுவாக ஈர்க்கப்படுகிறார்கள் என்பது நமக்கு தெரியவந்தது. அனைத்து அடிப்படை வசதிகள் அடங்கிய இப்பகுதியில் அதையும் தாண்டி பல சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

கார் நிறுத்தும் இடம் போதுமானதாக உள்ளதா என்பதை நிகழ்ச்சி நடத்துபவர்கள் எப்பொழுதும் சிந்தித்து பார்ப்பார்கள். அதிலும் அது இலவசமாக வழங்கப்பட்டால் அது அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி தான். அதில் மிட்லெண்ட்ஸ் முதலிடம் வகிக்கின்றது. இந்த சலுகைக்காகவே இந்த மண்படத்தில் பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றது. இதர பகுதிகளில் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், வாடிக்கையாளர்களுக்கு சுமை தராத வகையில் மிட்லெண்ட்ஸ் செயல்படுகின்றது.

கிள்ளான், ஷா ஆலம், பெட்டாலிங் ஜெயா இந்த மூன்று முதன்மை பகுதிகளுக்கும் மையப் பகுதியில் அமைந்து இருக்கின்றது மிட்லெண்ட்ஸ் மாநாட்டு மண்டபம்.  வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்துதான் இவர்கள் சேவையை வழங்குறார்கள். அதில் இவர்களை ஈடு செய்ய ஆள் இல்லை. அதோடு இந்த மண்டபத்தில் அமைந்துள்ள ஒலி, ஒளி சேவை சிறப்பாக இருப்பதோடு அதற்கு குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது.

இரவு 11 மணி வரை நீங்கள் நிகழ்ச்சியை நடத்துவதற்கு இங்கு நேரம் வழங்கப்படுகின்றது. அதையும் தாண்டி நீங்கள் நிகழ்ச்சியை தொடர்ந்தால் கூடுதலாக ஒரு மணி நேரம் இலவசமாக வழங்கப்படுகின்றது. சுத்தம் சுகாதாரம் இந்த இரண்டிற்கும் மிட்லெண்ட்ஸ் நிர்வாகம் ஒருபோதும் அலட்சிய போக்கை கடைப்பிடிப்பதில்லை. எப்போதும் இரண்டு பணியாளர்கள் வேலையில் அமர்த்தப்பட்டுள்ளார்கள்.

இதையும் தவிர்த்து மன்ற மாநாடு மண்டபங்களைக் காட்டிலும் தனி சிறப்பு வகிப்பது வாடிக்கையாளர்களுக்கு இவர்கள் ஏற்படுத்தி தரும் வர்த்தகம் சார்ந்த விஷயம் தான். மிட்லெண்ட்ஸ்மாநாட்டு மண்டபத்தில் நீங்கள் ஒரு நிகழ்ச்சிக்கு ஒப்பந்தம் செய்த பிறகு உங்களை தங்களின் வாடிக்கையாளர்களாக இணைத்துக் கொள்வார்கள். நீங்கள் ஒப்பந்தம் செய்த தொகைக்கு ஏற்றவாறு வாடிக்கையாளர் அட்டை வழங்கப்படும்.

வேறு ஒரு நபர் இம்மாதிரியான நிகழ்ச்சியை செய்ய முற்பட்டாலும் அவர்களுக்கு நீங்கள் மிட்லெண்ட்ஸ் மாநாட்டு மண்டபத்தை பரிந்துரை செய்தால் அவர் செலுத்தும் தொகையிலிருந்து உங்களுக்கு 2.5 விழுக்காடு வழங்கப்படும். இதில் மற்ற மாநாட்டு மண்டபங்களை காட்டிலும் மிட்லெண்ட்ஸ் மாநாட்டு மண்டபம் இதில் தனி சிறப்பு வகிக்கின்றது. ஆண்டிற்கு குறைந்தது 100 நிகழ்ச்சிகள் இந்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெறுகின்றது. மக்களின் மகத்தான ஆதரவை பெற்றுள்ள மிட்லெண்ட்ஸ் மாநாட்டு மண்டபம் நமது பட்டியலில் முதலிடம் வகிக்கின்றது.

Midlands Convention Centre tops among the public halls for Indians as the Best Event Hall around PJ, Puchong and Klang. click the link.. முழு பட்டியலை அறிய இந்த  லிங்கை கிளிக் செய்யுங்கள்.. TOP 10 CONVENTION HALL

2. டி.எஸ்.ஆர். மாநாட்டு மண்படம்

இந்த வரிசையில் 2ஆம் இடம் பிடிப்பது டி.எஸ்.ஆர். மாநாட்டு மண்படம். 2017 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மாநாட்டு மண்டபம் புதுப்பொலிவுடன் இருப்பதால் வாடிக்கையாளர்களை கவர்கின்றது. ஒலி ஒளி அமைப்புகளுக்கு இந்த மண்டபம் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆனால் இங்கு கார் நிறுத்துமிடத்திற்கு பணம் வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ஒரு இடத்தில் இந்த பொது மண்டபம் மேல் மாடியில் அமைக்கப்பட்டிருக்கின்றது.

3. ஐ.டி.சி.சி. ஷா ஆலம்

ஷா ஆலமில் அமைந்திருக்கும் ஐ.டி..சி.சி. மாநாட்டு மண்டபம் நமது பட்டியலில் 3ஆம் இடம் பிடிக்கின்றது. மத்திய நெடுஞ்சாலையை கடந்து செல்லும் பொழுது இடது புறம் இருக்கும் மிகப் பெரிய மண்டபமாக இது திகழ்கின்றது. அதற்கு ஏற்றார்போல் இதன் கட்டணமும் அதிகம் தான். கார் நிறுத்துமிடம் இங்கு இலவசம் என்றாலும், 11வது மாடியில் இந்த மாநாட்டு மண்டபம் அமைந்திருப்பது மின்தூக்கி காக நீண்ட நேரம் காத்து இருப்பதற்காக வழிவகுக்கின்றது. இதனால் இந்த மாநாட்டு மண்டபம் நமது பட்டியலில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்படுகிறது.

4. ஒன் சிட்டி பூச்சோங்

பூச்சோங். வட்டாரத்தில் அமைந்திருக்கும் ஒன் சிட்டி மாநாட்டு மண்டபம் பட்டியலில் நான்காவது இடத்தை எட்டிப் பிடித்திருக்கிறது. இவ்வட்டாரத்தில் இது பிரபலமான ஒரு மாநாட்டு மண்டபம் என்றாலும் கிள்ளான் பகுதிகளைப் பொறுத்தவரை சற்று தொலைவில் இருக்கும் மண்டபம் ஆகவே இது கருதப்படுகின்றது. பேரங்காடிக்கு மேல் இந்த மண்டபம் செயல்படுகின்றது. குறிப்பாக அதிகம் பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த பகுதியாகவும் இது விளங்குகின்றது. குடும்பத்தோடு தனிமையில் நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த மண்டபம் பின்தங்கிய தீர்வாகத்தான் இருக்கின்றது.

5. சிவிக் சென்டர் பெட்டாலிங் ஜெயா

பெட்டாலிங் ஜெயாவில் முதன்மை மாநாட்டு மண்டபமாக விளங்குகிறது எம்.பி.பி.ஜே. சிவிக் சென்டர். இது அமைந்திருக்கும் இடம் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்கிறது. ஆனால் அரசாங்க நிகழ்ச்சிகள் இறுதி நேரத்தில் முடிவு செய்யப்பட்டால் நீங்கள் ஒப்பந்தம் செய்த நிகழ்ச்சிகள் தடைசெய்யப்படும் சாத்தியமும் இருக்கிறது. அதனால் இந்த இடத்தை வாடிக்கையாளர்கள், பயத்தோடு முன் பதிவு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது.

6. ஸ்டார் லைட் அரேனா

பெட்டாலிங் ஜெயாவில் அமைந்திருக்கும் மற்றொரு மாநாட்டு மண்டபம் ஸ்டார் லைட் அரேனா. சிவிக் சென்டரை போல இவர்களும் 5.0 மதிப்பெண்களைப் பெறுகின்றார்கள். இந்த மண்டபம் ஆறாவது மாடியில் அமைந்திருக்கின்றது. இவர்களின் சேவை முழு மனநிறைவு அளிக்கவில்லை என்பது தான் வாடிக்கையாளர்களின் கருத்தாக இருக்கின்றது. பராமரிப்பும் சிறந்த அளவில் இல்லை என்பதுதான் இங்கு நிலவும் மிகப்பெரிய சிக்கல்.

வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து சேவையை முன்னெடுக்கும் மண்டபங்கள் எப்பொழுதும் அவர்களின் மனதில் நிலையான இடத்தை பிடித்து விடுகின்றன. அதேபோல் நாம் நடத்திய கண்ணோட்டத்தில் இந்த ஆறு மாநாட்டு மண்டபத்தில் முதல் வரிசையை அலங்கரித்துள்ளன அதில் மிட்லெண்ட்ஸ் முதலிடம் பிடித்த இருக்கின்றது.

அதனைத் தொடர்ந்து 7 ஆவது இடத்தில் கிள்ளானில் அமைந்துள்ள கோங் ஹோ மண்டபம், 8 ஆவது இடத்தில் பெட்டாலிங் ஜெயா ஜெஸ்மின் மண்டபம், 9ஆவது இடத்தில் ஷா ஆலம் இளைஞர் மாநாட்டு மண்டபம் இறுதியாக 10ஆவது இடத்தில் கிள்ளாம் ஹோக்கியன் மண்டபம் இடம் பிடித்துள்ளன

அநேகனின் கண்ணேட்டம் தொடரும்….