பிடிப்பட்ட புலி இறந்து விட்டது! – டாக்டர் ஜெயக்குமார் வருத்தம்

புத்ராஜெயா, ஜூலை 23-

டூங்கும், கம்போங் பெசூல் லாமா குடியிருப்புப் பகுதியில் புலி நடமாட்டம் இருந்ததாகப் தகவல் கிடைத்ததைத்லடுத்து, வனவிலங்கு பாதுகாப்புப் பிரிவினர் கடந்த ஜுலை 19-ஆம் தேதி அந்தப் புலியை பிடித்தனர்.

அப்போது புலியை பரிசோதித்தபோது முகத்திலும், காலிலும் காயம் ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அவாங் பெசூல் என்று அழைக்கப்படும் அந்தப் புலிக்கு சிகிச்சை வழங்க வனவிலங்கு இலாகாவினர் அப்புலியை சுங்கையில் உள்ள வனவிலங்கு பாதுகாப்பு மையத்திற்கு கொண்டு சென்றனர் என மலேசிய வனவிலங்கு பாதுகாப்பு இலாகாவினர் பத்திரிகை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 20-ஆம் தேதி முதல் மருத்துவக் கண்காணிப்பில் அந்தப் புலிக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. புலி சோர்வாக இருந்ததைத் தொடந்து, பின்னர் எடுக்கப்பட்ட பரிசோதனையில், முச்சுக் குழாயில் தொற்றுவியாதி பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

 

புலியின் ரத்தத்தை சோதனை செய்ததில் Virus Canine Distemper எனும் வைரஸ் புலியைத் தாக்கியுள்ளது தெரியவந்துள்ளது. தொடர் சிகிச்சை பலன் அளிக்காமல், இன்று காலை அவாங் பெசூல் புலி இறந்தது என, மலேசிய வனவிலங்கு பாதுகாப்பு இலாகாவினர் பத்திரிகை அறிக்கையின் வழி தெரித்துள்ளதை அறிந்து தாம் மிகுந்த வருத்தம் அடைவதாக நீர், நிலம், இயற்கைவள அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கூறியுள்ளார். மலேசியாவின் அடையாளமான புலி இறந்து விட்டது மனதிற்கு சங்கடமாக இருப்பதாகவும் அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.