புதன்கிழமை, டிசம்பர் 11, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > இசைக் கலைஞர் வே.மணியரசன் மறைவு!
சமூகம்

இசைக் கலைஞர் வே.மணியரசன் மறைவு!

கிள்ளான், ஜூலை 23-

வண்ணமலர், சங்கீதா உள்ளிட்ட பல இசைக்குழுக்களில் கீ போர்ட் கலைஞராக விளங்கிய மணியரசன் வேலுமாரியாய் காலமானார்.

20 வயதில் கலைத் துறையில் ஈடுபடத் தொடங்கிய இவர் வானொலி கலப்பட நிகழ்ச்சி மற்றும் மேடை நிகழ்ச்சிகளில் கீ போர்ட் இசையை வழங்கியிருப்பதோடு தனது இனிய குரல் வழி பல பாடல்களைப் பாடி ரசிகர்களை மகிழ்வித்திருப்பதாகவும் ஸ்ரீ கௌரி மனோகரி இசைக்குழுவின் தலைவர் எஸ். பி. புருஷோத்தமன் தெரிவித்தார்.

அதே வேளையில், நிகழ்ச்சிகளில் ஒலி அமைப்பு பணியையும் மணியரசன் திறம்பட மேற்கொண்டு வந்ததாகவும் அன்னாரின் மறைவையொட்டி அனுதாபம் தெரிவித்த கலைஞர்களில் ஒருவரான புருஷோத்தமன் விவரித்தார்.

மணியரசன் (53) பெட்டாலிங் ஜெயா விவேகானந்தா தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் சுப்ரமணியம் அவர்களின் இளைய சகோதரர் ஆவார்.

இம்மாதம் 2 ஆம் தேதி நடந்த சாலை விபத்தில் தலையில் ஏற்பட்ட காயங்களுக்காக சுங்கை பூலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் இன்று அதிகாலை மணி 1.30க்குக் காலமானதாகத் தெரிவிக்கப்பட்டது.

ரிபாமா மெனுஃபெக்சுரிங் நிறுவனத்தின் உரிமையாளரான மணியரசன் ஷா பண்டார் 0610 ரேலா பிரிவின் தலைவராக துடிப்புடன் செயலாற்றியிருப்பதாகவும் அறியப்படுகிறது. இவருக்கு மனைவி நாகராணியும் மகன் கபிலனும் உள்ளனர்.

அன்னாரின் இறுதி மரியாதைச் சடங்கு நாளை 24-07-2019(புதன்கிழமை) காலை 9மணி முதல் 11வரை எண் 42, Jln Bendara 14,Tmn Sentosa Jaya, Klang எனும் முகவரியில் நடைபெறும். அவரின்  நல்லுடல் சிரம்பான் பஹாய்  இடுகாட்டில் அடக்கம் செய்யப்படும். தொடர்புக்கு      016 2331134,    019 2712701.

 

சிறந்த 10 பொது மண்டபங்களில் மிட்லெண்ட்ஸ் முதலிடம்! அநேகன் கண்ணேட்டம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன