சிங்கப்பூர், ஆக, 22-
ஆசிய வாழ்க்கைமுறை சுற்றுலா விருது விழாவில் மலேசியாவின் முன்னணி கேளிக்கை தளமாக விளங்கும் லோட்டஸ் டேசாரு பீச் ரிசோர்ட் & ஸ்பா இந்த ஆண்டுக்கான முன்னணி விருதை வென்றுள்ளது. அந்நிறுவனத்திற்கு தெற்கிழக்காசியாவின் தலைசிறந்த கடற்கரைக்கான விருதை வென்றது. அதோடு கூட்டங்கள், கருத்தரங்குகள், கண்காட்சிகள் நடத்துவதற்கு சிறந்த தளமாகவும் லோட்டஸ் டேசாரு பீச் ரிசோர்ட் & ஸ்பா தேர்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்த விருதை லோட்டன்ஸ் குழுமத்தின் நிர்வாகிகள் டத்தோ ரெனா துரைச்சிங்கம், டத்தோ ரெனா ராமலிங்கம் பெற்றுக் கொண்டார்கள். இது குறித்து கருத்துரைத்த டத்தோ ராமலிங்கம், இந்த சாதனை தனிமனிதனுக்கு சொந்தமல்ல. இது ஒரு கூட்டுமுயற்சி. குறிப்பாக லோட்டஸ் டேசாரு பீச் ரிசோர்ட் & ஸ்பாவில் பணிபுரியும் அனைவரது பங்கும் இதில் அடங்கியுள்ளதாகக் கூறினார்.
லோட்டஸ் குழுமம் இணையும் வரையில் டேசாரு பீச் ரிசோர்ட் & ஸ்பா சிறிய நிலையில் செயல்பட்டது. தற்போது, இதன் வளர்ச்சி விஸ்வரூபம் கண்டுள்ளது. குறிப்பாக கட்டம் கட்டமாக அனைத்து நிலைகளிலும் மேம்பாடு கண்டு இப்போது இந்த விருதையும் வென்றுள்ளோம். இது மலேசிய இந்தியர்களின் உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம்.
லோட்டஸ் டேசாரு பீச் ரிசோர்ட் & ஸ்பாவில் 1650 அறைகள் உள்ளன. பெரிய நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் நடத்தக்கூடிய 3 மாநாட்டு மண்டபங்களும் உள்ளன. இங்கு 250 பணியாளர்கள் இருக்கின்றார்கள். இவர்களின் உழைப்பிற்குக் கிடைத்த அங்கீகாரமாக இதைக் கருதுகிறேன் என டத்தோ ரெனா ராமலிங்கம் தெரிவித்தார்.
