புதன்கிழமை, ஜனவரி 22, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > சினிமா பிரபலங்களால் பிக்பாஸ் வீட்டில் கலகலப்பு!!
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

சினிமா பிரபலங்களால் பிக்பாஸ் வீட்டில் கலகலப்பு!!

மீரா வெளியேற்றம் முடிந்து, பொதுவில் நாமினேஷன் வந்து, அதுவே மனகசப்பாகி ஒரு வழியாய் சரியாகி தற்போது மீண்டும் பிக்பாஸ் வீட்டில் கலகலப்பு தொடங்கி இருக்கிறது.

வீட்டில் யார் என்ன செய்கிறாறோ அதை வைத்தே டாஸ்க் கொடுத்து நாரதர் வேலையத் தொடங்கும் பிக்பாஸ், இந்த வார டாஸ்க் ‘போடு ஆட்டம் போடு’ கொடுத்துள்ளார். சாண்டி எம்.ஜி.ஆரைப் போல நடித்த போதே இப்படி ஒரு டாஸ்க் வரும் என்று கணிக்கப்பட்டது.

இந்த டாஸ்க்கின்படி ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஒரு சினிமா கதாபாத்திரம் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி சின்னக்கவுண்டராக சரவணனும், மங்காத்தா அஜித்தாக கவினும், ரஜினி கேரக்டரில் சேரனும், சிம்பு கேரக்டரில் சாண்டியும் மாறியுள்ளனர்.

அதேபோல் பெண் போட்டியாளர்களுக்கும் பழைய நடிகைகளின் கேரக்டர்கள் வழங்கப்பட்டுள்ளது. இது சினிமா சம்பந்தப்பட்ட டாஸ்க் என்பதால் போட்டியாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கு பெற வாய்ப்பு உள்ளது. மேலும் பார்வையாளர்களுக்கும் இந்த டாஸ்க் சுவாரஸ்யமாக இருக்கும் என கருதப்படுகிறது.

முன்பு சரவணன் நடிக்கும் காலத்திலேயே அவரை சின்ன விஜயகாந்த் என்று கூறுவதுண்டு. அவருக்கு பொருத்தமாக சின்னக்கவுண்டர் விஜயகாந்த் கேரக்டர் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் மங்காத்தா அஜித் கெட்டப்பில் கவினும் அசத்துகிறார். அவரது மீதிருந்த கோபம் எல்லாம் பறந்து செல்லும்படி அவரது நடிப்பும் ஆட்டமும் உள்ளது. மேலும் இந்த கெட்டப்பில் யாரையும் ஹர்ட் பண்ணக்கூடாது என்று கவின் லாஸ்லியாவிடம் சொல்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன