வியாழக்கிழமை, நவம்பர் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > சரவணனை அவமதித்தது விஜய்.டிவி..!
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

சரவணனை அவமதித்தது விஜய்.டிவி..!

பிக்பாஸ் வீட்டில் இருந்து சித்தப்பு சரவணன் அதிரடியாக நீக்கப்பட்டிருப்பது பொது மக்களிடையே அதிர்ச்சியும் அதிருப்தியும் ஏற்படுத்தி இருக்கிறது. வெள்ளந்தியாக தாம் செய்த தவற்றை ஒப்புக்கொண்டதும் அதற்கு மன்னிப்பு கேட்டதற்கு இங்கு அர்த்தமே இல்லாமல் செய்து, தங்கள் தரப்பை நியாயப்படுத்துகிறது விஜய்.டிவி.

ரேஸ்மாவின் வெளியேற்றத்திற்குப் பின்னர் மீண்டும் பிக்பாஸ் வீட்டில் ஏற்பட்டிருக்கும் இந்த வெளியேற்றம் சரியானது அல்ல என்று சமூக வலைத்தளங்கள் அனல் பறக்கும் விவாதங்களை முன் வைத்திருக்கின்றன.

சரவணுடன் பேசிய பிக்பாஸ், ‘மீரா மற்றும் சேரன் விவகாரம் பற்றிப் பேசும் போது பேருந்தில் ஆண்கள் பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளவே பயணிக்கிறார்கள் என்ற கருத்து எழுந்தது. அப்போது நீங்களும் உங்கள் கல்லூரி காலங்களில் இதைச் செய்திருப்பதாகக் கூறியிருந்தீர்கள். இந்த நிகழ்ச்சியைக் கோடிக்கணக்கான மக்கள் பார்த்துகொண்டிருக்கிறார்கள். பெண்கள் விஷயத்தில் எந்தவிதமான தவறாக அனுகுமுறையும் ஏற்றுக்கொள்ளப்படாது. இதன் காரணமாக இந்த நிகழ்ச்சியில் நீங்கள் தொடரக்கூடாது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதனால் நீங்கள் உடனே வெளியேற்றப்படுகிறீர்கள்’ என்று கூறினார்

கன்ஃபெஷன் அறையின் மற்றொரு கதவு வழியாக அவர் வெளியே அனுப்பப்பட்டார் அவருடைய வெளியேற்றம் குறித்து மற்ற போட்டியாளர்கள் யாருக்கும் எதுவும் தெரியாது.

தாம் செய்த தவற்றைச் சரவணன் ஒப்புக்கொண்டு, மற்றவருக்குப் பாடமாக இருக்க வேண்டும் என்பதைக் குறிபிட்டு பேசினாரே தவிர, அவர் வேறெந்த தவறும் செய்யவில்லை என்பது மக்களின் கருத்தாக உள்ளது.

சரவணனின் இந்தக் கருத்து கடும் சர்ச்சையைக் கிளப்பியதால் பலரும் இதற்குக் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், திங்கட்கிழமை ஒளிபரப்பான நிகழ்ச்சியில் சரவணனை மன்னிப்பு கேட்கும்படி பிக்பாஸ் கூறினார். இதையடுத்து பேசிய சரவணன், தன்னைப் போல யாரும் தவறு செய்யக்கூடாது எனவும், தான் கூறிய கருத்துக்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

சரவணன் பேசியது தவறு என்றால், அதனை அங்குக் கேட்டு சிரித்து மக்கள் கைத்தட்டி அவரது நேர்மையைப் பாரட்டியதும் தவறுதானே. அதற்கும் மேல்,  ”இது அதையும் தாண்டி புனிதமானது” என்று சரவணனனுக்குப் பதில் கொடுத்த கமலும் தவறுதானே. இது அனைத்தையும் விட, அதனைப் பதிவு செய்த போது, எடிட் செய்த போதும் கவனிக்காமல் டி.ஆர்.பிக்காக விஜய் டிவிஅதனை ஒளிபரப்பிவிட்டுத் தற்போது சரவணனை தண்டித்து அவமதித்து இருக்கிறது.

அவரை வீட்டை வெளியேற்றியது குறித்து மக்கள் தங்களின் வாதங்களைச் சமூக வளைத்தளங்களில் இப்படிய பதிவு செய்து வருகின்றனர்.

1. பெண்களை அப்படி மதித்து வரும் விஜய் டிவியே, கடந்த முறை மருத்துவ முத்தம் கொடுத்து பெண்ணுக்குக் கஷ்டம் ஏற்படுத்திய ஒருவரை ஏன் வெற்றியாளர்னு சொன்னாங்க அது மட்டும் சரியா?

2. இந்த நிகழ்வை நான் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன். உண்மை சொல்வது தவறா.. அவர் முன்பு செய்த தவறை ஒரு பொது மேடையில் ஒப்புக்கொண்டார். அதற்கு வருத்தமும் தெரிவித்தார். இதை விட வேறு என்ன செய்ய வேண்டும். என்ன ஒரு காரணத்திற்க்காக இப்படி ஒரு தேவை இல்லாத செயல்..நிச்சயமாக அவர் செய்ததை நான் நியாயப்படுத்த வில்லை. ஆனால்,இந்த முடிவை எடுத்த உங்கள் பிக்பாஸ் குழுவில் உள்ள அந்த உன்னதமானவர்களின் வரலாற்றைத் திரும்பி பார்க்கச்சொல்லுங்கள். அவர்கள் செய்த தவறுகள் வெளிவரும். ஒரு மனிதனை மன்னிப்பு கேட்க வெய்த்து விட்டு, சில நாட்கள் கடந்தும், அவரை இப்படி அசிங்கப்படுத்தி வெளியேற்றியது தவறு.

3. விஜய் டிவி தன்னை நல்லவனாய் காட்டி கொள்ள ஒரு வாரத்துக்கு முன்னாடி சொன்ன காரணத்துக்காக ஒருவரை தண்டிப்பது என்பது முட்டாள் தனமான வேலை. சரவணன் மீது ஆயிரத்து எட்டு விமர்சனங்கள் இருக்கலாம். ஆனா இந்தச் செயல் முட்டாள் தனமான வேலை தான் ஒரு தொகுப்பாளராய் இருந்து அதே இடத்தில் இருந்து கண்டித்து வெளியேற்றி இருந்தாலும் பாராயில்லை அதைச் சிரிச்சு ரசிச்சுகிட்டு இருந்த கமலுக்கு என்னா தண்டனை?

4. சரவணனை வெளியே அனுப்பியதற்கு மக்களிடம் பிக்பாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்

இப்படியாக விமர்சனங்கள் இன்னும் தொடர்கின்றன…. இனி என்ன ஆகும்?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன