கைரூல் ஹபிசுக்கு பிரதமர் பாராட்டு

0
5

கோலாலம்பூர், ஆக.23 –

2017 சீ விளையாட்டுப் போட்டியில் தென்கிழக்காசியாவின் அதிவேக ஓட்டக்காரர் என்ற மகுடத்தை சூடியுள்ள தேசிய ஓட்டப்பந்தய வீரர் கைரூல் ஹபிஸ் ஜந்தானுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்டுள்ளார்.

அனைத்து மலேசியர்களைப் போல தாமும் கைரூல் ஹபிஸ் ஜந்தானின் அடைவுநிலையில் மனநிறைவு கொள்வதாக நஜிப் தெரிவித்தார். 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் தாம் ஒரு சிறந்த ஓட்டக்காரர் என்பதை கைரூல் ஹபிஸ் நிரூபித்துள்ளதாக பிரதமர் கூறினார்.

அதோடு ரசிகர்களின் ஆதரவும் கைரூல் ஹபிசின் வெற்றிக்கு உந்துகோலாக இருந்தது என அவர் குறிப்பிட்டார். கைரூல் ஹபிசின் வெற்றி மலேசியாவுக்கு ஒரு சிறந்த தருணம் என்றும் அவர் சொன்னார்.

19 வயதுடைய கைரூல் ஹபிஸ் ஜந்தான் செவ்வாய்கிழமை நடைபெற்ற ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் தங்கம் வென்றார்.