புதன்கிழமை, ஜனவரி 29, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > மன்னிப்பு கேட்டும் என்னை இவ்வாறு செய்தது வேதனை அளிக்கிறது – சரவணன்
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

மன்னிப்பு கேட்டும் என்னை இவ்வாறு செய்தது வேதனை அளிக்கிறது – சரவணன்

பிக்பாஸில் மன்னிப்பு கேட்ட பின்பும் தன்னை அவ்வீட்டிலிருந்து வெளியேற்றியது மிகுந்த வேதனையை அளித்திருக்கிறது என்று நடிகர் சரவணன் கூறியதாக இணைய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருக்கின்றன.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட டாஸ்க்கின் போது சேரன் தன்னை தவறாக தொட்டதாக மீராமிதுன் சர்ச்சையைக் கிளப்பியிருந்தார். சமீபத்தில் இந்த விவகாரம் குறித்து போட்டியாளர்கள் மத்தியில் உரையாடினார் கமல்ஹாசன். அப்போது பேசிய சரவணன், தனது கல்லூரி காலத்தில் பேருந்தில் பயணிக்கும் போது பெண்களை உரசியதாக வெளிப்படையாக கூறினார்.

இந்த விவகாரத்துக்கு சமூகவலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்ததை அடுத்து சரவணனை மன்னிப்பு கோரும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. தாம் சொல்ல வந்தது என்ன என்பது குறித்து தெளிவாக விளக்கமளித்து அவரும் பொதுவில் மன்னிப்பு கோரியதை தொடர்ந்து இந்த விவகாரம் முடித்துவைக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை அன்று சரவணனை கன்பெஷன் அறைக்க அழைத்த பிக்பாஸ், “பெண்களைப் பற்றிய தவறான கருத்துகளைக் கூறியதால், பிக்பாஸ் குழு உங்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளது. யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் இப்படியே சென்று விடுங்கள்” என்று கூறினார். இப்படியே சென்று விடுங்கள் என்று கூறியதற்கு மறுவார்த்தை பேசாமல் அங்கிருந்து வெளியேறினார் சரவணன்.

இந்த நிலையில் சரவணன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர் நான் பிக்பாஸில் கொஞ்ச நாட்கள் இருந்துவிட்டு பணம் பங்குபெற்று வரலாம் அதன் மூலம் புது வாழ்க்கையை துவங்கலாம் என எண்ணியிருந்தேன் . ஆனால், எனக்கு இப்படியொரு அவப்பெயரையும், கலங்கத்தையும் ஏற்படுத்தி என்னை வெளியே அனுப்பிவிட்டார்கள்.
நான் கல்லூரி படித்த காலத்தில் பேருந்தில் பெண்களிடம் விளையாட்டாக தவறாக நடந்து கொண்டது உண்மை தான். ஆனால் நான் பிக்பாஸ் வீட்டிற்கு அதற்காக செல்லவில்லை. அங்கிருக்கும் பெண்களிடம் கண்ணியமாக தான் நடந்துகொண்டேன். அப்படியிருந்தும் என்னை இப்படி அவமானப்படுத்தி வெளியேற்றிவிட்டார்கள்.

இது முன்னரே தெரிந்தால் நான் பிக்பாஸிற்கு சென்றிருக்கவே மாட்டேன். எனக்கு ஒரே ஒரு மன கஷ்டம் தான், நான் கூறிய கருத்திற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் என்னிடம் இவ்வாறு நடந்து கொண்டது எனக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது என்று சரவணன் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன