வியாழக்கிழமை, நவம்பர் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > மீண்டும் நானே வந்தேன் – பிக்பாஸ் வனிதா
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

மீண்டும் நானே வந்தேன் – பிக்பாஸ் வனிதா

பிக் பாஸ் வீட்டிற்கு சிறப்பு விருந்தினராக முன்னாள் போட்டியாளரான வனிதா வந்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் மூன்றில் ஆரம்பத்தில் இருந்தே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வனிதா மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்திருக்கின்றார்.

இது பிக் பாஸ் வீடா அல்லது வனிதாவின் வீடா என்று மக்களே குழம்பிப் போகும் அளவிற்கு முன்பு அவரது நடவடிக்கைகள் இருந்தன. வீட்டில் எப்போதும் அவரது சத்தம் தான் ஓங்கி இருந்தது.

அதோடு, மகளைக் கடத்தியதாக இரண்டாவது கணவர் புகார் அளித்த விவகாரத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள்ளேயே சென்று வனிதாவைப் போலீசார் விசாரித்தனர். எல்லாம் முடிந்து யாரும் எதிர்பார்க்காத வண்ணம் அதிரடியாக இரண்டாவது போட்டியாளராக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் வனிதா.

மூன்றாவது வாரமே அவர் வெளியேறியது மக்களை அதிர்ச்சி அடைய வைத்தது. அதுவரை வனிதாவை திட்டியவர்கள்கூட, அவரது வெளியேற்றத்தால் பிக் பாஸ் வீடு களையிழந்து விட்டதாகக் கவலைப்பட்டனர். போட்டியாளர்களுக்கும் மக்களுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றிருக்கிறார் வனிதா. இன்றைய முதல் புரொமோவில் அந்தக் காட்சிகள் தான் இடம் பெற்றுள்ளது.

இந்த வாரம் ஹோட்டல் டாஸ்க் போட்டியாளர்களுக்கு தரப்பட்டுள்ளது போல. போட்டியாளர்கள் அனைவரும் ஹோட்டல் ஊழியர்கள் உடையில் உள்ளனர். அப்போது சிறப்பு விருந்தினராக உள்ளே வருகிறார் வனிதா.

அக்கா வரும் போதே, ஏதோ பெரிய விசயம் காத்திருக்கு என்பது நன்றாகத் தெரிகிறது…!

இது தொடர்பான கருத்துகளை பார்க்கும் போது வனிதாவின் வருகை பலருக்கு ஆவலாக இருந்தாலும் இன்னும் நிறைய பேருக்கு அது கொஞ்சம் கொதிப்பாகத்தான் தெரிகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன