கோலாலம்பூர், ஆக 17-

சர்ச்சைக்குரிய சமய போதகர் ஜாகிர் நாய்க் தம்மீது வழக்கை தொடரட்டும் என்றும் இது தொடர்பில் வரும் சவாலை சந்திக்க தாம் தயாராக இருப்பதாகவும் மனிதவள அமைச்சர் குலசேகரன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவைச் சேர்ந்த ஜாகிர் நாய்க் கடந்த வாரம் கிளாந்தானில் தாம் சொற்பொழிவாற்றியதை அடிப்படையாகக் கொண்டு குலசேகரன் உட்பட நால்வர் வெளியிட்ட அறிக்கைகள் மற்றும் பத்திரிகை செய்திகள் மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதால் அவர்கள் மீது நேற்று போலீசில் புகார் செய்திருந்தார்.  எனவே, குலசேகரன் 48 மணிநேரத்திற்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் ஜாகிர் நாய்க் வழக்கறிஞர் நோட்டிஸ் அனுப்பியிருக்கிறார்.

இதனிடையே, தனது பதிலுக்காக அவர் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை; தாராளமாக தம்மீது வழக்கு தொடரட்டும் என்றும் நீதிமன்றத்தில் சந்திக்க தயாராக இருப்பதாகவும் ஜப்பான் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டிருக்கும் குலசேகரன் தெரிவித்திருக்கிறார்.