செவ்வாய்க்கிழமை, ஜனவரி 28, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > அக்டோபர் 1 முதல்  முன் பதிவுக்கான செயலாக்க அல்லது பரிசீலனை கட்டணத்தை  ஏர் ஆசியா அகற்றவிருக்கிறது
சமூகம்மற்றவைமுதன்மைச் செய்திகள்

அக்டோபர் 1 முதல்  முன் பதிவுக்கான செயலாக்க அல்லது பரிசீலனை கட்டணத்தை  ஏர் ஆசியா அகற்றவிருக்கிறது

கோலாலம்பூர், ஆக 18-

பாதுகாப்பான முன்பதிவு சூழ்நிலையை  பெறுவதை உறுதிப்படுத்துவதற்கு  ஏர் ஆசியாவின்  இணைய சேவையின்  நிர்வாக, பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு செலவுகளின் தொடர்பில் செயலாக்க கட்டணம் அமைந்திருந்தது.

ஏர் ஆசியா விமான நிறுவனம்  முன்னோக்கிச் செல்வதற்கான  முழுமையான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதால்  செயலாக்க  கட்டணம்  ரத்து செய்யப்படுவதாக  ஏர் ஆசிய  விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்  கூறியுள்ளது. நிர்வாகம்,பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு  செலவினங்களில் ஏர் ஆசியாவின் இணைய சேவை தொடர்பில் அந்த செயலாக்க கட்டணம் அமைந்திருந்தது. அனைவரும் விமானத்தில் பயணம் செய்யும் வகையில்  இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கட்டுப்படியான விலையில் பயணம் செய்யலாம் என்ற  ஏர் ஆசியாவின் தாரக மந்திரத்திற்கு ஏற்ப செயலாக்க கட்டணத்தை அந்த விமான நிறுவனம் ரத்து செய்துள்ளது .இப்போது அனைவரும் விமானத்தில் பயணம் செய்ய செய்யலாம் என்ற எங்களது வாக்குறுதி உண்மையானது  என்ற நிலை நிறுத்தப்படுகிறது.

கே.எல்.ஐ.ஏ 2 ல் பயணிகளுக்கான சேவை கட்டணம் உயர்ந்ததை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எங்களது விருந்தினர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக செலவுகளை நாங்கள் குறைக்க விரும்புகிறோம்.

ஒவ்வொரு சிறிய உதவிகளும் பயணிகளுக்கு உதவ முடியும் என ஏர் ஆசியா குழுமத்தின் (ஏர்லைன்ஸ்) தலைவர்  போ லிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

அடுத்தாண்டு 2020இல் மலேசியாவுக்கு வருகை புரியும் ஆண்டாக இருப்பதால்  மலேசியாவுக்கு பயணம் செய்வதற்கும் மலேசியாவிற்குள் பயணிப்பதற்கு பயணிகளுக்கு இந்த நடவடிக்கை உதவ முடியும் என அவர் தெரிவித்தார்.

மலேசியாவுக்கு வருகை புரியும் ஆண்டு பெரிய அளவில் வெற்றி பெறுவதை நாங்கள் விரும்புகின்றோம். மலேசிய சுற்றுலா தொழில் துறைக்கு இது ஆக்கபூர்வமான பலனைத் தரும் என்பதோடு மலேசியாவின் பொருளாதாரத்திற்கும் நல்லதொரு ஊக்குவிப்பாக இருக்கும் என  போ லிங்கம் கூறினார்.

எங்களது சேவையை நாட்டிற்கு வழங்குவதற்கு ஒரு வழியாகவும் இது அமைந்திருப்பதா போ லிங்கம் தெரிவித்தார். அதோடு 2019ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்குள் தாய்லாந்து இந்தோனேசியா மற்றும் பிலிப்பின்சிற்கான  செயலாக்க கட்டணத்தையும்  ஏர் ஆசியா  அகற்றும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன