கோலாலம்பூர், ஆக 23-
ஆகஸ்ட் நான்காவது வாரத்தில் பெட்ரோல் விலையில் எந்தவொரு மாற்றமில்லை. இந்நிலையில், டீசல் விலை ஒரு லிட்டருக்கு 3 காசு குறைந்துள்ளது.

ரோன் 95 பெட்ரோல் விலை தொடர்ந்து ஒரு லிட்டருக்கு 2 வெள்ளி 15 காசாகவும் ரோன் 97 பெட்ரோல் விலை தொடர்ந்து ஒரு லிட்டருக்கு 2 வெள்ளி 43 காசாவும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

அதே வேளையில், கடந்த வாரம் ஒரு லிட்டருக்கு 2 வெள்ளி 4 காசாக இருந்த டீசல் விலை நாளை முதல் 3 காசாக குறைந்து ஒரு லிட்டருக்கு 2 வெள்ளி ஒரு காசாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.