என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் – செய்தியாளர்! வழக்கு தொடுப்பேன்! – மருத்துவர்

பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 20-

கோலாலம்பூரின் பாங்சாரில் உள்ள தனது கிளினிக்கில் ஒரு நோயாளியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக மருத்துவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இதில் பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர் தாஷ்னி சுகுமாரன், 28, வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 16ஆம் தேதி பரிசோதனைக்காகக் கிளினிக்கிற்குச் சென்றபோது தோல் மருத்துவரால் “தகாத முறையில்” தம்மைத் தொட்டதாகக் குற்றம் சாட்டினார்.  “நான் என் தாடையில் ஏற்பட்ட பிரச்சனைக்குத் தீர்வு காண அந்த மருத்துவரை அணுகிய போது இச்சம்பவம் நிகழ்ந்ததாகத் தர்ஷினி கூறினார்.

“ஆலோசனையின் போது, அவ்வாறு செய்வதை நிறுத்தும்படி நான் அவரிடம் கூறிய போதிலும், அவர் என் தொடை மற்றும் முழங்காலில் பல முறை தொட்டார்,” என்று அவர் தி ஸ்டார் ஊடகத்திடம் கூறியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் தனது அனுபவத்தை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாகவும் கூறிய தாஷ்னி, அதே மருத்துவர் பல பெண்களிடம் இவ்வாறு நடந்து கொண்டது தமது தெரிய வந்ததாகவும் சொன்னார். இந்த அனைத்து சம்பவங்களும் சில வாரங்களுக்கு முன்பு நடந்தவை,” என்று அவர் கூறினார்.

இது குறித்துத் தாம் கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 17) புகார் அளித்ததையும் அவர் உறுதிப்படுத்தினார்.  இதன் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் கோலாலம்பூர் சிஐடி துணை ஆணையர் ருஸ்டி முகமட் இசா உறுதிப்படுத்தினார்.

இதற்கிடையில் தோல் மருத்துவர் டாக்டர் ரூபன் நாதன் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். “இந்தக் குற்றச்சாட்டில் உண்மையில்லை. மாறாக அவரது தாடை முழங்கால் வரை மேலோட்டமான தோல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது எப்படி பாலியல் துன்புறுத்தலுக்கு ஒப்பானது என்ற கேள்வியை அவர் முன்வைத்துள்ளார். இந்தப் பரிசோதனையின் போது தம்முடன் ஒரு தாதி இருந்ததையும் அவர் சுட்டிக் காட்டினார்.

தம்மீது கூறப்பட்ட இந்தப் பொய் புகாரை எதிர்த்து வழக்கு தொடுக்கலாமா? எனத் தாம் ஆலோசித்து வருவதாகவும் ரூபன் கூறினார்.