ஜோகூர் நீர் வடிகால் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு!  – டாக்டர் ஜேவியர் ஜெயக்குமார்

ஜோகூர்பாரு, ஆகஸ்ட் 20-

ஜோகூரில் நிலவும் நீர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வுக் காணும் வகையில் அதிகமான நீர் சுத்திகரிப்பு நிலையங்களைக் கட்டுவதற்கு மாநில அரசு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. இதன் வழி சுத்திகரிக்கப்பட்ட நீருக்காகச் சிங்கப்பூரை நம்பியிருக்க வேண்டிய அவசியமில்லை.

2022ஆம் ஆண்டு வரை ஜோகூரில் போதுமான நீர் விநியோகம் இருப்பதை உறுதிச் செய்யும் வகையில் அனைத்து நிலைகளிலும் உதவி புரிவதற்கு நீர், நிலம், இயற்கைவள அமைச்சு உறுதுணையாக இருக்குமென அமைச்சர் டாக்டர் ஜேவியர் ஜெயக்குமார் உறுதியளித்தார்.

அமைச்சுக்களுக்கும் ஜோகூர் அரசாங்கத்திற்கும் இடையிலான கலந்துரையாடல்கள் ஒருமித்த கருத்தை எட்டியுள்ளதாகவும், மாநிலத்தில் சுத்திகரிக்கப்பட்ட நீர் வடிகால் பிரச்சினைக்குத் தீர்வு காண உடனடியாக நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். புத்ராஜெயாவில் ஜோகூர் மந்திரி பெசார் டாக்டர் ஷாருடின் ஜமாலை மரியாதை நிமிர்த்தமாகச் சந்தித்த பிறகு டாக்டர் ஜேவியர் ஜெயக்குமார் செய்தியாளர்கலிடம் பேசினார்.

இந்தச் சந்திப்பில் நில மேலாண்மை, ஜோகூர்பாரு மற்றும் பசீர் கூடாங்கில் நிதி மாசுபாட்டை நிவர்த்திச் செய்வதற்கான நடவடிக்கைகள் உட்படப் பல விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

PUTRAJAYA – Kerajaan Negeri Johor akan melaksanakan penyelesaian jangka panjang kepada isu bekalan air termasuk membina beberapa loji air bagi mengurangkan kebergantungan kepada bekalan air terawat dari Singapura.

Menteri Sumber Air, Tanah dan Sumber Asli, Dr Xavier Jayakumar berkata, kementeriannya akan memberi kerjasama penuh bagi memastikan bekalan air di negeri Johor mencukupi menjelang tahun 2022.