பொக்பாவுக்கு எதிராக நிற வெறி தாக்குதல்- மென்செஸ்டர் யுனைடெட் ஆட்டக்காரர்கள் அதிருப்தி !

0
16

மென்செஸ்டர், ஆகஸ்ட்.21- 

மென்செஸ்டர் யுனைடெட் மத்திய திடல் ஆட்டக்காரர் போல் பொக்பாவுக்கு எதிராக அதன் ரசிகர்கள் சிலர் சமூக ஊடங்களில் நடத்தியுள்ள நிற வெறி தாக்குதல் சக ஆட்டக்காரர்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது. திங்கட்கிழமை நடைபெற்ற இங்கிலீஷ் பிரீமியர் லீக் ஆட்டத்தில், மென்செஸ்டர் யுனைடெட் , வோல்வர்ஹாம்ப்டனை எதிர்கொண்டது.

இந்த ஆட்டத்தில் கிடைத்த பினால்டி வாய்ப்பை போல் பொக்பா நழுவ விட்டார். இதனால் அதிருப்தி அடைந்த சில ரசிகர்கள் டுவிட்டரில் பொக்பாவுக்கு எதிராக நிற வெறி தாக்குதல்களைத் தொடுத்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் மென்செஸ்டர் யுனைடெட் நிர்வாகம் விசாரணை தொடங்கியுள்ளதாகவும் சம்பந்தப்பட்ட ரசிகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

போல் பொக்பாவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நிற வெறி தாக்குதல் குறித்து வருத்தம் அடைவதாக மென்செஸ்டர் யுனைடெர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேவேளையில் ரசிகர்களின் கருத்துகள், மென்செஸ்டர் யுனைடெட்டின் நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே போல் பொக்பாவுக்கு ஆதரவாக மென்செஸ்டர் யுனைடெட் ஆட்டக்காரர்களும் கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர். குறிப்பாக மார்கோஸ் ராஷ்போர்ட், ஹாரி மகுவாயர் போன்ற ஆட்டக்காரர்கள் ரசிகர்களின் கருத்துகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். அதேவேளையில் வோல்வர்ஹாம்ப்டனுக்கு எதிரான ஆட்டத்தில் மார்கோஸ் ராஷ்போர்ட்டுக்குப் பதில் பினால்டியை எடுக்க முற்பட்ட பொக்பாவின் முடிவில் தவறில்லை என்று அதன் நிர்வாகி ஒலே கன்னர் சோல்ஜ்ஸ்கர் தெரிவித்துள்ளார்.