இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படும் ப.சிதம்பரம்.. 14 நாள் காவலில் எடுக்க சிபிஐ முடிவு !

0
12

டெல்லி, ஆகஸ்ட்.22 :

நேற்று இரவு கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் இன்று டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு யாருக்கும் எதிர்பார்க்காத அளவிற்கு மிகவும் பரபரப்பாக சென்று கொண்டு இருக்கிறது. ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனமானது இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி ஆகியோருக்கு சொந்தமானதாகும். இது மும்பையை சேர்ந்த நிறுவனம். 2007ம் ஆண்டு, மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ஐஎன்எக்ஸ் நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதில் முறைகேடு நடந்துள்ளது.

இதில் வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பர சிக்கி உள்ளார். இதில் கடந்த 14 மாதங்களாக இவரை கைது செய்ய டெல்லி கோர்ட் தடை விதித்தது இருந்தது. இந்த நிலையில் நேற்று முதல்நாள் டெல்லி ஹைகோர்ட் இவருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்த

அதன்பின் நேற்று உச்ச நீதிமன்றத்தில் ப. சிதம்பரம் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். ஆனால் அதை அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. நாளை காலைதான் இந்த வழக்கை விசாரிப்போம் என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது. இந்த நிலையில் நேற்று முதல் நாள் மாலையில் இருந்து 24 மணி நேரமாக சிபிஐ ப. சிதம்பரத்தை தேடி வந்தது

இந்த நிலையில் நேற்று இரவு ப. சிதம்பரம் காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்துவிட்டு டெல்லியில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு சென்றார். அவரை தேடி வந்த சிபிஐ உடனடியாக அங்கு சென்றது. அதன்பின் அவருடைய வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக சென்று உள்ளே எகிறி குதித்தனர். 40 சிபிஐ அதிகாரிகள் உள்ளே சென்று ப. சிதம்பரத்தை கைது செய்தனர்.

அதன்பின் இரவோடு இரவாக ப. சிதம்பரம் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ சோதனை செய்யப்பட்டது. இன்று மதியம் வரை அவர் வெளியே வர மாட்டார். யாரையும் சந்திக்க மாட்டார்.

இன்று மதியம் இரண்டு மணிக்கு டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்படுகிறார். ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில்தான் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு நடைபெற்று வருகிறது.ப. சிதம்பரத்தை சிபிஐ 10 -14 நாட்கள் காவலில் எடுத்த விசாரிக்க சிபிஐ திட்டமிட்டுள்ளது என்கிறார்கள். அதே சமயம் ப. சிதம்பரம் தரப்பு இன்று ஜாமீன் கோர முடிவு செய்துள்ளது.