செவ்வாய்க்கிழமை, ஜனவரி 28, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > ஜாகிர் நாயக் எதிரான பேரணி ரத்து- ஃபாங்கி ஷங்கர்
சமூகம்முதன்மைச் செய்திகள்

ஜாகிர் நாயக் எதிரான பேரணி ரத்து- ஃபாங்கி ஷங்கர்

கோலாலம்பூர், ஆக 24-

சர்ச்சைக்குரிய சமய போதகர் ஜாகிர் நாயக் எதிரான சனிக்கிழமை நடக்கவிருந்த அமைதி பேரணி ரத்து செய்யப்பட்டதாக அதன் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் ஃபாங்கி ஷங்கர் கூறியுள்ளார்.

இரண்டு காரணங்களுக்காக இந்த அமைதி பேரணி கைவிடப்படுவதாகக் கூறியுள்ளார். இந்த பேரணியை நடத்திவற்கு அனுமதி கிடைக்கவில்லை.

அதோடு பிகேஆர் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் தம்மை தொடர்புக் கொண்டு இந்த பேரணியை கைவிட வேண்டுமென கேட்டும் கொண்டதாகவும், இது குறித்து பேசுவதற்கு அடுத்த நேரம் ஒதுக்கியிருப்பதாகவும் கூறினார்.

அந்த இரண்டு காரணங்களுக்காக ஜாகிர் நாயக்க்கிற்கு எதிரான அமைதி பேரணி நடக்காது என சங்கர் கூறியுள்ளார். சனிக்கிழமை இந்தப் பேரணியில் கலந்து கொள்ள யாரும் தலைநகருக்கு வர வேண்டாம் என்றும் அவர் கேட்டும் கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன