செவ்வாய்க்கிழமை, ஜனவரி 28, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > இந்திய சமுதாய  பிரச்சினைகளை தீர்வு காண புதிய கட்சி தொடக்கம்
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

இந்திய சமுதாய  பிரச்சினைகளை தீர்வு காண புதிய கட்சி தொடக்கம்

சுபாங், ஆக.24-

மலேசிய இந்தியர்களின் பிரச்னையை தீர்வு காண்பதற்கு மலேசிய இந்திய நீதி காங்கிரஸ் எனும் புதிய கட்சியை தொடங்கியிருப்பதாக அதன் தலைவர் சண்முக ராமைய்யா தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி உருவாக்கப்பட்ட இந்தக் கட்சி இவ்வாண்டு மே மாதம் சங்க பதிவிலாகாவில் முறையாக பதிவு பெற்று இன்று செயல்பட தொடங்கியுள்ளது. நாடு முழுவதிலும் சுமார் 200 கிளைகள் உள்ளன. அதில் 30,000 உறுப்பினர்கள் உள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

கட்சியின் வாயிலாக நம் சமுதாயத்தை கல்வி, பொருளாதாரம், தொழில்திறன் துறைகளில் வளர்சியடைய செய்ய வேண்டும். அதே வேளையில், இந்தியர்கள் அதிகம் சந்திக்கும் குடியுரிமை பிரச்னையை தீர்வுக் காண்பதில் அதிக கவனம் செலுத்த போவதாகவும் நேற்று சுபாங் டோர்செட் விடுதியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில்.சண்முகம் இவ்வாறு தெரிவித்தார்.

இக்கட்சியில் உள்ள உறுப்பினர்கள் தங்களது துறைகளில் சிறந்து விளங்குகின்றனர். மக்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் பட்டதாரிகளும் தொழில்முனைவர்களும் இக்கட்சியில் உள்ளனர். மக்களுக்கு சேவை செய்ய விரும்பும் நபர்களை கட்சியில் இணைத்து சமுதாயத்தில் மாற்றத்தை கொண்டுவர திட்டமிட்டுள்ளோம் என்றும் இன்னும் 6 மாதத்தில் 1 லட்சம் உறுப்பினர்களை கொண்டு மக்கள் சேவையில் ஈடுபடுவோம் என்றும் அவர் கூறினார்.

நாங்கள் யாரையும் எதிரியாக நினைக்கவில்லை. எங்களுக்கான பாதையில் நாங்கள் செல்லவிருக்கிறோம். எதிர்வரும் அக்டோபர் மாதம் தீபாவாளிக்கு முன் கட்சியின் ஆண்டுக் கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ள்ளோம். அதில் எங்களுடன் இணைந்துள்ள சேவையாளர்களை மக்களுக்கு அறிமுகப்படுத்துவோம் என்று சண்முகம் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன