செவ்வாய்க்கிழமை, ஜனவரி 28, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > தேசம் சாதனையாளர் விருது; மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பெறலாம்
சமூகம்முதன்மைச் செய்திகள்

தேசம் சாதனையாளர் விருது; மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பெறலாம்

கோலாலம்பூர், ஆக 24-

பல துறைகளில் சாதனை படைத்தவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு தேசம் ஊடகம் சாதனையாளர் விருதை வழங்கி வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு 130 சாதனையாளர்களுக்கு விருது வழங்கப்படவுள்ளது.. இந்த தேசம் ஊடக சாதனையாளர் விருது மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக தேசம் தோற்றுநர் குணாளன் மணியம் நம்பிக்கை தெரிவித்தார்.

கடந்த 2017 தொடங்கி ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் “தேசம் ஊடக சாதனையாளர்கள் விருது விழா 2018/2019 இன்று ஆகஸ்டு 24ஆம் தேதி பண்டார் சௌஜானா புத்ராவில் உள்ள மாசா பல்கலைக்கழக மாநாட்டு மண்டபத்தில் நடைப்பெறவுள்ளது.

கடந்த 2017இல் ஊடகவியலாளர்களின் சாதனைக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் ஊடக பணியாளர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டது. அதுமட்டுமன்றி கலைத்துறை, விளையாட்டுத் துறை, வர்த்தகத் துறை, அரசின் சார்பற்ற நிறுவன சேவைகள், தமிழ்ப்பள்ளி, பொது சாதனையாளர்கள் என்று பலருக்கு இந்த அங்கீகார விருது வழங்கப்பட்டது.

அதே போன்று இம்முறை நடைபெறும் விருது விழாவிலும் 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் சாதனை படைத்த சாதனையாளர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படும். விருது பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்ட இருப்பதால் இந்த விருது விழா மலேசிய சாதனையாளர் புத்தகத்தில் இடம் பெறலாம் என்று அவர் சொன்னார்.

இந்த விருது விழாவிற்கு ஆதரவாக திகழும் மாசா பல்கலைக்கழகம், மலிண்டோ நிறுவனம், டிஎச்ஆர் ராகா, மாலிக் ஸ்திரிம் நிறுவனம், சினிபெஸ்ட் ஆகியோருக்கு தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.

இந்த விருது விழாவில் பிரதமர் துறை அமைச்சர் வேதமூர்த்தி, மாலிக் ஸ்ரிம் கார்ப்ரேஷன் உரிமையாளர் டத்தோ அப்துல் மாலிக் ஆகியோர் சிறப்பு பிரமுகர்களாக கலந்து கொள்ளவிருக்கின்றனர். அதோடு, சின்னத்தம்பி நாடக புகழ் ப்ரஜின், பவானி ரெட்டி, அபி சரவணன், குட்டி பிரகாஷ் உட்பட பல கலைஞர்கள் கலந்து கொள்ளவர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன