செவ்வாய்க்கிழமை, ஜனவரி 28, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > ஹவால் முஹர்ரமால் கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு தடை! இது புதுச் சட்டமா?
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

ஹவால் முஹர்ரமால் கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு தடை! இது புதுச் சட்டமா?

கோலாலம்பூர், ஆகஸ்ட் 26-

ஆகஸ்ட் 31ஆம் தேதி ஹவால் முஹர்ரம் பிறப்பதால் இசை, கலை உட்பட எந்தவொரு கேளிக்கை நிகழ்ச்சிகளையும் நடத்தக்கூடாது எனத் தொடர்பு, பல்லூட அமைச்சின் கீழ் செயல்படும் திரைப்படத் தயாரிப்பிற்கான சர்வதேச நிறுவனம் மற்றும் வெளிப்புற கலைஞர்களின் அனுமதி பிரிவும் (புஸ்பால்) மலேசிய முஸ்லிம் முன்னேற்றத் துறை (ஜாகிம்) அறிவித்துள்ளன.

இதன் காரணமாக ராகவ் புராடக்‌ஷன் ஏற்பாட்டில் 31ஆம் தேதி சனிக்கிழமை இரவு 7 மணிக்கு கேஎல்சிசி பைனரி அரங்கில் நடைபெறவிருந்த எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் இளைய நிலா இசை நிகழ்ச்சி மதியம் நடைபெறுமென ஏற்பாட்டுக் குழுவினர் அறிவித்துள்ளார்கள்.

இந்த இசை இந்நிகழ்ச்சியை நடத்துவதற்கான அனுமதியை பெற்ற பிறகுதான் டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்டிருக்கும். இந்நிலையில் திடீரென இதனை அறிவிக்க வேண்டிய அவசியமென்ற கேள்வியும் மக்கள் மத்தியில் நிலவுகின்றது.

சூரியம் மறைவதற்குள் இசை நிகழ்ச்சியை முடித்து விட வேண்டுமென ராகவ் நிறுவனத்திடம் கூறப்பட்டுள்ளது. இந்நாட்டிலுள்ள முஸ்லிம் அன்பர்கள் தங்களின் புதிய ஆண்டுத் தொடக்கத்தைக் கொண்டாடுவதை யாரும் நிராகரிக்கவில்லை. இருப்பினும் மற்ற சமயத்தைச் சார்ந்தவர்களும் எந்தவொரு நடவடிக்கையில் ஈடுபடகூடாது எனக் கூறப்படுவது எந்த வகையில் நியாயம் என்ற கேள்வியும் இங்கு எழுகின்றது.

சனிக்கிழமை மதியம் 3 மணிக்கு தொடங்கும் இசை நிகழ்ச்சிக்கு எப்படி ஆதரவு இருக்குமென்பது ஏற்பாட்டுக் குழுவினரை மனமுடைய வைத்துள்ளது. டிக்கெட்களை அனைத்தும் விற்று தீர்ந்துள்ள நிலையில், திடீரென நேரத்தை மாற்றியிருப்பது பல்வேறான பிரச்னைகளையும் உருவாக்குமென்பதை யாரும் மறுக்க முடியாது.

ஹவால் முஹர்ரம் பிறக்கும நேரத்தில் இசை நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என்பது புதிய சட்டமா? அல்லது நடைமுறையில் இருக்கின்றதா? என்ற கேள்வியும் எழுகின்றது. இசை நிகழ்ச்சி நடத்தக்கூடாது என்றால் கேளிக்கை விடுதிகளின் நிலை என்ன?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன