புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > இந்தியா/ ஈழம் > செயற்கை கால்களுடன் கார் பந்தயத்தில் சாதனை படைக்கும் சேட்டன்
இந்தியா/ ஈழம்முதன்மைச் செய்திகள்

செயற்கை கால்களுடன் கார் பந்தயத்தில் சாதனை படைக்கும் சேட்டன்

கோலாலம்பூர், ஆக 27-

இரண்டு கால்களும் இல்லாதவர்கள் வாழ்க்கையில் நம்பிக்கை இழந்து பலருக்கு வேதனையை ஏற்படுத்தி விடுவார்கள். ஆனால் சேட்டன் கொரடா இதற்கு விதிவிலக்காகத் திகழ்கிறார். பிறக்கும்போதே கால்கள் சிதைந்து இருந்ததால் முட்டிக்கு கீழே அவரது கால்கள் துண்டிக்கப்பட்டது. அதன்பின் தமது வாழ்க்கையில் செயற்கை கால்களை மட்டுமே நம்பி இருக்கவேண்டிய சூழ்நிலைக்குச் சேட்டன் உள்ளானார்.

தமது வயதுடைய மற்ற சிறுவர்களை ஒப்பிடுகையில் அதிகமான சிரமங்களை எதிர்நோக்கி வந்ததோடு அவரது உடல் அமைப்பு மற்றும் எடை அதிகரித்ததால் ஆறு மாதத்திற்கு ஒருமுறை தமது செயற்கை கால்களை மாற்ற வேண்டும். இந்தச் சிரமங்கள் எதுவும் 32 வயதுடைய சேட்டன் வாழ்க்கையில் சாதனை மற்றும் வெற்றியை பதிவு செய்வதை நிறுத்தவில்லை.

தம்மைப் போன்றவர்கள் நடக்கவும், ஓடவும், சைக்கிள் ஓட்டவும், நண்பர்களுடன் விளையாடவும் கூடைப்பந்து மற்றும் டென்னிஸ் போன்ற விளையாட்டுக்களில் தமது பள்ளி நாட்களில் சேட்டன் ஈடுபட்டுள்ளார்.  கார் பந்தயத்தில் ஒருமுறை கலந்து கொண்டதைத் தொடர்ந்து அதில் ஏற்பட்ட ஆர்வத்தினால் அவர் தொடர்ந்து அத்துறையில் ஈடுபட்டு வருகிறார்.

இளம் வயதிலிருந்து கார்கள் மீது தீவிர ஈடுபாடு காட்டி வந்த சேட்டன் தமது வருமானத்தில் பெரும் பகுதியை இதற்காகச் செலவிட்டுள்ளார். 2007 ஆம் ஆண்டு இந்தியாவில் கார்பந்தயத் தடம் திறக்கப்பட்டதை அவர் அறிந்தார். தமது நண்பரின் மூலம் சென்னை கார்பந்தய விளையாட்டு தடத்தின் திறப்பு தினமும் அவருக்குத் தெரியவந்தது.

அந்தப் பந்தயத் தளத்தில் கார் பந்தயம் தொடர்பான அடிப்படை பயிற்சியைப் பெற விரும்புவோருக்குப் பொதுமக்கள் தங்களது கார்களை வாடகைக்கு விடுவதையும் சேட்டன் அறிந்தார். ஃபார்முலா 1,300 காருக்காகச் சுமார் 30 நிமிடங்கள் நான் வெளியே அமர்ந்திருந்தேன்.

அந்தக் காருக்குள் நான் உள்ளே நுழைய முடியுமா எனக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன் என்னைப் பற்றி மக்கள் என்ன நினைப்பார்கள் என்றும் நினைக்கவேண்டிய நேரமும் வந்தது.. பிறகு அந்தக் காருக்குள் உள்ளே நுழைந்தேன். அக்கார் ..பொருத்தமாகவும் இருந்ததால் நான் அதனை ஒட்டி பார்க்க விரும்பினேன்.

நான் அதை ஒட்டிய போது பந்தயக் கார்களை ஓட்ட முடியும் என்ற நம்பிக்கையும் எனக்கு வந்தது. அதனைண் தொடர்ந்நு கடந்த 12 ஆண்டுக் காலமாக வெவ்வேறு கார்பந்தயப் போட்டிகளில் கலந்து கொள்வதிலிருந்து நான் பின் வாங்கியதில்லை எனச் செப்பாங் அனைத்துலகக் கார் பந்தயத் தளத்தில் பெர்னாமாவிடம் பேசியபோது சேட்டன் தெரிவித்தார்.

தென்னிந்தியாவில் ஆந்திராவில் பிறந்தவரான சேட்டன் இத்தாலியின் முன்னாள் ஃபார்முலா 1 கார் பந்தய வீரர் அலெக்ஸ் ஷானோர்டிக்குப் பிறகு செயற்கை கால்களுடன் கார் பந்தயத்தில் கலந்து கொள்ளும் இரண்டாவது வீரராகத் திகழ்கிறார்.  அதோடு செயற்கை கால்களின் மூலம் உலகில் கார் பந்தயத்தில் வெற்றி பெற விரும்பும் முதல் வீரராகவும் அவர் வர விரும்புகிறார். ஏற்கனவே பல்வேறு கார் பந்தயப் போட்டிகளில் அவர் வெற்றிப் பெற்றுள்ளார். இவ்வாண்டு இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஃபார்முலா 3 ஆசிய சம்பியன்ஷிப் போட்டிக்காக இரசிய (Eurasia Motorsport)ன் ஃபார்முலா மாஸ்டர் காரின் மூலம் அவர் தம்மைத் தயார்படுத்தி வருகிறார்.

உலகில் மாற்றுத் திறனாளி பந்தய வீரர்கள் மாற்றப்பட்ட வடிவங்களைக் கொண்ட கார்களைப் பயன்படுத்தி வருகின்றனர். கிளட்ச், பிரேக் மற்றும் ஆக்சிலேட்டரை கைகளில் கட்டுப்படுத்தும் அளவுக்குப் பாகங்களை உருமாற்றிக் கொண்டு மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

திருத்தி அமைக்கப்பட்ட கட்டுப்பாட்டில் உள்ள கார்களைப் பயன்படுத்தாமல் எந்த ஒரு கார் பந்தய வீரர்களுடன் நியாயமான முறையில் சேட்டன் போட்டியிட விரும்புகிறார். எனக்கு வசதியாக எனது பந்தயக் காரின் வடிவத்தை மாற்றுவதற்கு உதவப் பலர் முன்வந்தனர்.  ஆனால் இதர போட்டியாளர்களுக்குச் சரிநிகரான காரையே நான் பயன்படுத்த விரும்புகிறேன்.

என்னைப் பொறுத்தவரை கார்பந்தயம் என்பதே போட்டியை கொடுப்பதாக இருக்க வேண்டும் என்று சேட்டன் கூறுகிறார்.  குழந்தைப் பருவத்திலிருந்தே நான் எதையும் நம்பி இருக்கவில்லை. எனது நடமாட்டத்திற்காகச் சிறப்புத் தேவைகள் எதனையும் நான் பயன்படுத்தவில்லை . நான் தன்னம்பிக்கை கொண்டவராக இருக்கிறேன். எனக்குள் நான் தன்முனைப்பு கொண்டவராகச் செயல்பட்டு வருகிறேன்.

என்னை எவரும் தடுக்க முடியாது . சாதனைப் பயணத்தை நோக்கி நான் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன் எனச் சேட்டன் உறுதியாகவும் நம்பிக்கையோடும் கூறுகிறார் .  2011ஆம் ஆண்டிலிருந்து கியுனெட் ஆதரவை பெற்று வரும் சேட்டனின் கார் பந்தய வெற்றிக்கு அவரது தாயார் பத்மாவும் மனைவி மனசையும் பெரும் ஊக்குவிப்பாகவும் தூண்டுகோலாகவும் இருந்து வருகின்றனர். ஆடியோ பொறியியல் துறையில் 2002ஆம் ஆண்டுப் பட்டம் பெற்றது முதல் கடந்த 8 ஆண்டுகளாக டி.ஜே தொகுப்பாளராகச் சேட்டன் பணியாற்றி வருகிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன