ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 23, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > முதல் வீடு வாங்குவோருக்கு நிதிச் சலுகை! – பொன்.வேதமூர்த்தி
சமூகம்முதன்மைச் செய்திகள்

முதல் வீடு வாங்குவோருக்கு நிதிச் சலுகை! – பொன்.வேதமூர்த்தி

புத்ராஜெயா, ஆக. 27-

குறைந்த வருமானம் பெறுவோர் தங்களின் முதல் வீட்டை வாங்குதவற்காக தேசிய வங்கி(பேங்க் நெகாரா) அறிவித்துள்ள நிதிச் சலுகையை சம்பந்தப்-பட்டவர்கள் பயன்படுத்திக் கொள்ளும்படி பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளர்.

இதன் தொடர்பில் 2019 ஜனவரி 2-ஆம் நாள் 1 பில்லியன் நிதித் திட்டத்தை அறிவித்தது. மாதம் 2,300-க்கும் குறைவான ஊதியம் பெறுவோர், ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் மதிப்புள்ள முதல் வீட்டை வாங்குததற்கு இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

தற்பொழுது, தேசிய வங்கி இந்தத் திட்டத்தை மேலும் விரிவு படுத்தியுள்ளது. இதன்படி, குடும்ப வருமானம் 4,360 வெள்ளி வரை பெறுவோர் மூன்று இலட்ச வெள்ளி மதிப்பிலான முதல் வீட்டை வாங்குவதற்கு முயற்சிக்கலாம். 2019 ஆகஸ்ட் 21-ஆம் நாள் தேசிய வங்கி அறிவித்துள்ள இந்த நடைமுறை 2019 செப்டம்பர் 1-ஆம் நாள் முதல் நடைமுறைக்கு வருகிறது.

வீடு வாங்குதன் தொடர்பில் விற்பனை மற்றும் கொள்முதல் ஒப்பந்தம், நிதி விண்ணப்பம், முன்பணம் செலுத்துதல், வீட்டுக் காப்புறுதி உள்ளிட்ட நடைமுறைச் செலவினத்திலும் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்பில் மேல் விவரம் அறிய கீழ்க்காணும் இணையப் பக்கத்தை சம்பந்தப்பட்டவர்கள் நாடலாம்.

http://www.bnm.gov.my/index.php?ch=en_press&pg=en_press&ac=4900 or visit us at https://www.facebook.com/waytha/

எனவே, குறைந்த வருமானம் பெறும் மலேசிய இந்தியர்கள், இந்தத் திட்டத்தின் மூலம் தங்கள் முதல் வீட்டை வாங்குவதில் முனைப்பு காட்ட வேண்டும் என்று தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும் எம்.ஏ.பி. கட்சித் தலைவருமான பொன்.வேதமூர்த்தி இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

2 thoughts on “முதல் வீடு வாங்குவோருக்கு நிதிச் சலுகை! – பொன்.வேதமூர்த்தி

  1. I seorang ibu tunggal. I beli 1 rumah. Harga rumah Rm38k. Tapi owner nak jual utk harga Rm 43. I dh keluarkan kwsp acc kedua. Tpi masih lagi i perlukan Rm 2000 utk tukar nama. Bila i tanya kat org bank ade apa2 discount utk pembeli rumah pertama? Dia kata x ade. Blh tak i cancel rumah tu n cuba rumah lain atas permudahan offer nie

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன