வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 28, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > நீக்கப்பட்ட 2 மாணவர்கள் கல்வியைத் தொடரவேண்டும் -அமைச்சர் குலசேகரன் உத்தரவு
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

நீக்கப்பட்ட 2 மாணவர்கள் கல்வியைத் தொடரவேண்டும் -அமைச்சர் குலசேகரன் உத்தரவு

புத்ராஜெயா, ஆக 28-

அலாய்ட் ஏரோநோட்டிக் டிரேய்னிங் செண்டர் எனும் தனியார் பயிற்சி நிறுவனம்  விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இன்று மனிதவள அமைச்சர் எம்.குலசேகரனை நேரில் சந்தித்தனர்.

விமானத்துறை சம்பந்தப்பட்ட கல்வி திட்டங்களை இயக்கி கொண்டிருக்கும் இக்கல்லூரியில் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர்.

ஆரம்பத்தில் வெ.2,500 மட்டும் செலுத்தினால் போதும், இதர கட்டணங்கள் அனைத்தும் பிடிபிகே கல்விக் கடனுதவி வாயிலாக பெற்றுக்கொள்ளலாம் என வாக்குறுதியைக் கொடுத்து பல மாணவர்களை இக்கல்லூரியில் இணைத்துள்ளனர்.

தற்பொழுது பிடிபிகே கல்விக்கடனுதவி அந்தக் கல்லூரி மாணவர்கள் பெறமுடியாது என்ற பச்சத்தில் அவர்கள் சுயமாக கட்ட வேண்டும் அல்லது வேறு கடனுதவியை பெற்றுக்கொள்ளலாம் என்று கூறி மாணவர்களை அதிருப்தியாக்கி விட்டனர்.

இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்ட கல்லூரி பொறுப்பாளர்கள், பிடிபிகே அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவர்களுடனும் மனிதவள அமைச்சர் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

கல்லூரி நிர்வாகத்தில் என்னென்ன பிரச்சனைகள் என்னென்ன வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டன என்று மனிதவள அமைச்சர் தீரவிசாரித்த பின் மாணவர்களும் அமைச்சரிடம் மனம் விட்டு அனைத்து கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.

இருதரப்பினர்களிடமும் முறையாக கலந்தாலோசித்து இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளவிருப்பதாகவும் அதற்கான முயற்சிகளை எடுப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

இதனிடையே கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக நியாயம் கேட்டு சென்ற மாணவர்களை நீக்கிய செயலை எதிர்த்து அவர்களை உடனே கல்லூரியில் மீண்டும் சேர்க்கப்பட வேண்டுமென்று உத்தரவிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன