கோலாலம்பூர், ஆக 28-

இந்திய சமுதாயத்தை வர்த்தக சமுதாயமாக மாற்றும் ஒரு மாபெரும் முயற்ச்சியாக ஒவ்வொரு திங்கட்கிழமைகளில் இரவு மணி 10.30க்கு  சிகரம் தொடு படைக்கப்படுகின்றது.

அதிகமான இந்தியர்கள் குறிப்பாக இளைஞர்கள் வியாபாரத்தில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் பொருட்டு வியாபார வாய்ப்புகள், அரசு சார்பற்ற அமைப்புகளின் மூலமாக கிடைக்கப்பெறும் வாய்ப்புகள், சலுகைகள், தொழில்முனைவர்களுக்கான வியாபார யுத்திகள், நுணுக்கங்கள் போன்றவை குறித்து இந்நிகழ்ச்சியில் கருத்துக்கள் பகிரப்படுகின்றன.

வியாபாரிகள் தங்களது வியாபாரத்தை அடுத்த கட்ட நகர்தலில் தடம் பதிக்க இந்நிகழ்ச்சி வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை. துடிப்புடன் செயலபட்டு வரும் இளம் தொழில்முனைவர்களின் சந்திப்புகள் சிகரம் தொடு நிகழ்ச்சியில் ஒலியேறுகின்றன.

இந்நிகழ்ச்சி மூலம் வியாபாரத் துறையில் நீங்கள் கால்பதிக்க உங்களுடன் மின்னல் எப் எம் கைகோர்கின்றது. இந்நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் சத்யா. இந்நிகழ்ச்சிக்கான உங்களது கருத்துக்களை நீங்கள் www.facebook.com/rtmminnalfm  அல்லது விளக்கங்களை பெற 03-22889137 எனும் எண்களை தொடர்பு கொள்ளலாம்.